பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்ற பாலா.. பரிசுத் தொகை மட்டும் இத்தனை லட்சமா?

நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. 14 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

அதில் போட்டியாளராக இருந்த வனிதா விஜயகுமார் தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஓட்டுகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வந்தனர். மேலும் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்கு பல கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டது.

அவை அனைத்திலும் திறமையாக விளையாடி பாலாஜி முருகதாஸ், நிரூப், தாமரை, ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாரென்பது நேற்று சிம்புவால் அறிவிக்கப்பட்டது.

இதை காண்பதற்காக ஹவுஸ் மேட்ஸ்கள் உட்பட ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை தாமரை மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் பிடித்தனர். மேலும் பாலாஜி மற்றும் நிரூப் இருவரும் டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை அறிய பதட்டத்துடன் மேடையில் நின்று கொண்டிருந்தனர்.

அனைவருக்குமே யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்திருந்தாலும் ஒருவித ஆர்வத்துடன் இருந்தனர். அப்போது சிம்பு வின்னரை அறிவிக்காமல் அனைவருக்கும் ஒரு வித டென்சனை ஏற்றிக் கொண்டே இருந்தார். அதிலும் பாலாஜி மற்றும் நிரூப் இருவரும் சொல்ல முடியாத பதட்டத்தில் இருந்தனர்.

பிறகு ஒரு வழியாக சிம்பு இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் பாலா என்று அறிவித்தார். இவருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாகவும் கொடுக்கப்பட்டது இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பி பாலாவுக்கு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதிலும் ஜூலி தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்துவிட்டு பாலாவின் ரசிகையாகவே மாறிவிட்டார்.

சிம்பு கவுன்டவுன் ஆரம்பிக்கும்போதே ஜூலி, பாலா பாலா என்று சத்தமிட்டு தன் ஆதரவை தெரிவித்தார். தற்போது இந்த நிகழ்வு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு வகையில் இந்த டைட்டிலுக்கு பாலா மிகவும் தகுதியானவர் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பாலா ஒரு நல்ல மனிதன் என்று பாராட்டியது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நிகழ்ச்சியில் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதையெல்லாம் மன உறுதியோடு கடந்து இன்று வின்னராக ஜொலிக்கும் பாலாவுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட வாழ்த்துகள் குவிந்து வருகிறது.