பிக்பாஸ் அல்டிமேட்டின் 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரி.. சூப்பர் குயினை தரையிறக்கும் விஜய் டிவி!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் கடந்த வாரம் முதல் வைல்டு கார்டு என்ட்ரி ஆக விஜய் டிவியின் கேபிஒய் பிரபலமும், மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆன நடிகர் சதீஷ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்தார்.

அவர் வருகைக்குப் பிறகு இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது வைல்ட் கார்ட் என்ட்ரி பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாஸ்லியா என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் தொடக்கத்தில் செய்தி வாசிப்பாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த லாஸ்லியா, அதன்பிறகு தன்னுடைய இலங்கைத் தமிழர் பேச்சின் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார்.

அத்துடன் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவ்வாறு இருக்க லாஸ்லியா மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், தற்போது இருக்கும் அல்டிமேட் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

அத்துடன் லாஸ்லியா ஏற்கனவே பிக்பாஸ் சீசன்3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னுடைய முழு ஈடுபாடு கொடுக்காமல், கவின் உடன் காதல் வயப்பட்டதால் அந்த சீசனில் தன்னுடைய முழு ஈடுபாடு அளிக்காததால், மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் களம் இறங்கும் லாஸ்லியா நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடனும் இருக்கிறாராம்.

எனவே அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தால் லாஸ்லியா பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.