பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்கான தலைவரை தேர்ந்தெடுக்க என்ன ஃபீலிங் என்ற தலைப்பில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது.

தலைவர் போட்டிக்கு போட்டியிடும் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தனித்தனியாக நிற்கின்றனர். போட்டியாளர் தங்கள் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் நிற்க வேண்டும். இவ்வாறு இறுதியில் வெல்பவர் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதில் நிரூப் மற்றும் அபிஷேக் இருவரும் பெண் போன்று உடையணிந்து போட்டியாளர்களை சிரிக்க வைக்க முயல்கின்றனர். முதலாவதாக ராஜுவிடம் சென்று இருவரும் கவர்ச்சி நடனம் ஆடுகின்றனர்.

ராஜு எந்த உணர்வையும் காட்டாமல் அப்படியே நிற்கிறார். பிறகு இசைவாணியிடம் வரும் அபிஷேக்  இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த டாஸ்க்கை ஜெயிக்கணுமா என்று கேட்கிறார். மேலும் ஒரு சட்டை வாங்க எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா என்று அவரை கலாய்க்கிறார்.

இதைப் பார்த்த இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்க மட்டுமே முயற்சி செய்யுங்கள் என்றும் பர்சனல் விஷயங்களை பேசாதீர்கள் என்று அறிவுரை கூறுகிறார். இவ்வாறு ப்ரோமோ முடிகிறது.

இசைவாணி இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவர் தன் கோபத்தை மறைப்பது நன்றாகவே தெரிகிறது. போட்டியின் முடிவில் இது ஒரு பஞ்சாயத்தாக மாற வாய்ப்பு இருக்கிறது. அபிஷேக்கின் இந்த செயல் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.