பிக்பாஸில் தந்திரமாக காய் நகர்த்தும் 3 போட்டியாளர்கள்.. பக்கா சட்டர்ஜி.!

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில், யாரெல்லாம் ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் என்பதில் ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் ஆங்கர் பிரியங்கா, நிரூப் மற்றும் ராஜு.

இவர்களில் ஆங்கர் பிரியங்கா நிகழ்ச்சியின் துவக்க நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் கலகலப்பாக வைத்துக்கொள்வதில் பிரியங்காவின் பங்கு அதிகமாக உள்ளது. இத்துடன் அவர் அவ்வப்போது செய்யும் அட்ராசிட்டி இசை காண்போருக்கு மனநிறைவைத் தருகிறது. அதனால் ஒருசிலர் பிரியங்கா தான் வலிமையான போட்டியாளர் என்று சோசியல் மீடியாவை சொல்லிக் கொள்கின்றனர்’

இருப்பினும் பிரியங்காவின் ஒவ்வொரு நகைச்சுவை பேச்சிலும் பிற போட்டியாளர்களை டாமினேட் செய்யும் விதத்தில் அமைந்து வருகிறது. இதுபோன்று பிரியங்கா, பிற போட்டியாளர்களின் மனது புண்படும்படி நடந்து கொள்வதால், இவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

அடுத்ததாக லிப்-லாக் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய நடிகர் நிரூப், தற்போது ஸ்ட்ராங்கான போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை யாஷிகாவை முத்தமிட்ட இவரது வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதை தொடர்ந்து தற்போது இவரும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

மேலும் பிக் பாஸ் போட்டியாளர் ராஜூவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது. இவரே தற்போது ஸ்ட்ராங்கான கன்டஸ்டன்ட் என்று கருதப்பட்டு வருகிறார். இனி வரும் டாஸ்குகளில் வெற்றியை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்கர் பிரியங்கா, ராஜு மற்றும் நிரூப் ஆகியோரே தற்போதைய ஸ்ட்ராங்கான போட்டியாளர்களாக கருதப்படுவதுடன் இவர்கள் மூவரும் பக்கா ஸ்டேட்டஜியுடன் தந்திரமாக விளையாடிக் கொண்டிருப்பதால், இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறிக்கின்றன.