பிக்பாஸில் கேமராவுக்காக ஆட்டம்போடும் அபிஷேக்.. ரெட் கார்டு கொடுப்பாரா கமல்.?

ஆயிரம் ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் தனக்கென்று ஒரு நீங்காத இடத்தை மக்கள் மனதில் பிடித்தது தான் பிக்பாஸ். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 தற்போது இரண்டாவது வாரத்திற்கான எலிமினேஷன் ப்ராசஸில் ஈடுபட்டு வருகிறது. ஆரம்பத்தில் இது பிக் பிக்பாஸ் வீடா என்று சந்தேகம் வரும் அளவிற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்கள்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவர்களின் உண்மையான சுயரூபம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்பின் முதல் வாரம் எலிமினேஷன் நடைபெறும்போது அபிஷேக் ராஜா கடைசி ஆளாக காப்பாற்றப்பட்டு தப்பித்துவிட்டார்,

ஆனால் அதையெல்லாம் அபிஷேக் ராஜா பொருட்டாக வைத்துக் கொள்ளாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இஷ்டத்திற்கு பேசுவதும். பிரியங்கா மற்றும் நிரூப் ஆகியோரை கூட்டு சேர்த்துக்கொண்டு, இவர்கள் எடுக்கும் முடிவை மற்ற போட்டியாளர்கள் மீது திணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கெல்லாம் ஆணிவேராக இருப்பது அபிஷேக். மேலும் நேற்று நடைபெற்ற டாஸ்கின் போது அபிஷேக் வைத்திருக்கும் காயினை தாமரைக்கு கொடுக்கப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லி தன்னைத்தானே விளம்பரப்படுத்தியது மட்டுமல்லாமல், தாமரையை தன் காலில் விழ வைத்த சூட்சமம் மிகுந்த போட்டியாளராக அபிஷேக் திகழ்கிறார்.

எனவே பிக் பாஸ் விளையாட்டின் போக்கை வேறு ஒரு கோணத்தில் மற்றி விளையாடிக் கொண்டிருக்கும் அபிஷேக்கிற்கு ரெட் கார்டு ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் அபிஷேக் ராஜா தான் விஜய் டிவி பிக் பாஸ் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்கு உதவுவதால் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பிக்பாஸ் குழுவினர் தயங்குகின்றனர் என்பதே உண்மை.