பிக்பாஸில் கலந்து கொள்கிறீர்களா? என கேட்ட ரசிகர்.. நாசுக்காக பதில் சொன்ன புகழ்

தமிழ் சேனல்களில் முதன்மை இடங்களில் இருப்பவை சன் டிவி மற்று் விஜய் டிவி. சீரியல்கள் சினிமாக்கள் என வரிசைகட்டி டிஆர்பியை மாற்றி மாற்றி முதலிடம் பிடிக்கும் சேனல்கள் இவைகள் தான்.

என்னதான் மற்ற நிகழ்ச்சிகள், சீரியல்கள் என சன் நெட்வொர்க் டிஆர்பியை ஏற்றிக்கொண்டாலும் பிக்பாஸ் குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள வாய்ப்பில்லா ராஜாதான் .

பிரபலமான பலரை ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் வரை வைத்து குறிப்பிட்ட போட்டிகளை நடத்தி மக்களின் சுவராஸ்யம் குறையாமல் நகர்த்தி செல்வதாலேயே பிக்பாஸ் ஷோ மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கிறது.

விரைவில் பிக்பாஸ்-சீசன் 5 வரவிருப்பதாக புரோமோ வெளியிடப்பட்டுவிட்டது ஆனாலும் போட்டியாளர்கள் பற்றி சில கருத்துக்கள் தறமாக வந்த வண்ணமே உள்ளன. இப்போது வரை போட்டியாளர்களின் பட்டியல் உறுதிப்படுத்தப்படாத நிலையில் குக் வித் கோமாளி சுனிதா, ஷகீலாவின் மகள், வடிவுக்கரசி என பட்டியல் நீண்ட வண்ணமே உலா வருகிறது.

வழக்கம்போல கமலஹாசன் இந்த சீசனிலும் தொகுப்பாளராக கலக்கவிருக்கிறார் ஜுன் ஜூலை மாதங்களிலேயே தொடங்கவிருந்த சீசன் இப்போது வரை ஆரம்பிக்கப்படாமல் இருந்ததற்கு ஊரடங்கு முதல் காரணம் வகிக்கிறது.

இந்நிலையில் விஜய்டிவியில் ஔிபரப்பான குக் வித் கோமாளி ஷோவில் பிரபலமடைந்த புகழிடம் பிக்பாஸ் வீட்டீற்குள் செல்லப்போகிறீர்களா என்று கேட்கவே தனது ஸ்டைலில் சிரித்து கொண்டே நான் என் வீட்டுக்கு தான் போகப்போறேன் என்று கூறினார் புகழ். விஜய் டிவியும் என் வீடுதான் என்று சொல்வதை போலவே உள்ளதால் அவர் கண்டிப்பாக உள்ள போவது உறுதி.

வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி பேச்சை மறுக்க முடியுமா. வசமாகவே சிக்கிவிட்டார் மனுஷன்.

அஜித்துடன் செல்பி எடுத்த போலிஸ் உயர் அதிகாரி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு சென்ற இடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ...