பிக்பாஸில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. வெளியேற அதிக வாய்ப்புள்ள நபர் யார் தெரியுமா.?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த வாரம் ஒருவர் வெளியேறுவதற்கான நாமினேஷன் புரோசஸ் நேற்று தொடங்கியது.

இதில் பிக்பாஸ் முதலாவதாக பிரியங்காவை கார்டன் ஏரியாவுக்கு அழைத்தார். வழக்கம்போல பிடிக்காதவங்கள வீட்டை விட்டு வெளியேற்றலாம் என ஆவலாக காத்திருந்தாங்க பிரியங்கா. ஆனால் அங்கதான் பிக்பாஸ் வச்சாறு ஒரு டுவிஸ்ட். இந்த வாரம் வீட்ல இருக்கணும்னு நினைக்கிற ரெண்டு பேர சொல்லணும். இதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என்று பிக்பாஸ் சொல்கிறார்.

மேலும் இந்த நாமினேஷன் விதிமுறைகளாக தங்களையே யாரும் காப்பாற்றிக் கொள்ளக் கூடாது என்றும், வருண் இந்த வீட்டின் தலைவர் ஆனதால் அவர் ஏற்கனவே காப்பாற்றப்பட்டு விட்டார். அதனால் வேறு இரண்டு நபர்களை சொல்ல வேண்டும் என்கிறார். இந்த நாமினேஷன் முடியும் வரை இதை பற்றி யாருடனும் பேசவோ, சைகை செய்யவோ கூடாது என்று எச்சரிக்கிறார்.

தாங்கள் சொல்ல விரும்பும் பெயரை கூறியவுடன், எதிரில் போட்டியாளர்கள் போட்டோ ஒட்டப்பட்டிருக்கும் ராக்கெட்டை வெடிக்க வேண்டும் என்கிறார். இதை எதிர்பார்க்காத பிரியங்கா இசைவாணி மற்றும் மதுமிதா பெயரைச் சொல்கிறார்.

இவ்வாறு ஒருவழியாக நாமினேஷன் ப்ராசஸ் முடிந்தது. யாராலும் காப்பாற்ற படாமல் வீட்டை விட்டு வெளியேற நாமினேட் ஆகி இருக்கும் நபர்களின் பெயர்களை பிக்பாஸ் அறிவிக்கிறார். இசைவாணி, பவானி ரெட்டி, நிரூப், ஸ்ருதி, ஐக்கி, அக்ஷரா, அபிநய், சிபி, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இதில் ஸ்ருதி, பவானி, நிரூப், இசைவாணி ஆகியோர் தங்களிடம் உள்ள காயினை உபயோகபடுத்தாத காரணத்தால் அந்த 9 பேர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் அபிநய் இந்த வாரம் வெளியேற்றபடலாம் என்று தெரிகிறது.