பிக்பாஸில் அதிக ரசிகர்களை உருவாக்கிய அண்ணாச்சியின் மனைவி, மகள்.. வைரலாகும் குடும்ப புகைப்படம்

இமான் அண்ணாச்சி தற்பொழுது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் சென்னை காதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி மேலும் சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

பிக்பாஸின் இந்த சீசனில் அதிக ரசிகர்களை கொண்டவர் அண்ணாச்சி. இதுவரை எந்த அவப்பெயரும் எடுக்காமல் நன்றாக விளையாடி வருகிறார். மேலும் ரசிகர்களின் ஆதரவும் இவருக்கு அதிகரித்து கொண்டே வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் அனைவருடனும் கலகலப்பாக பழகி வரும் இவர் கண்ணியத்துடனும் இருந்து வருகிறார். மற்ற போட்டியாளர்களை இடையே சண்டை வரும் பொழுது அதை மிகவும் சரியாகவே இவர் அணுகுகிறார்.

அவருடைய இந்த குணம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை நடத்திய இவருக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார்.

தற்போது இவருடைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தன் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அண்ணாச்சி உங்கள் மனசு போலவே உங்கள் குடும்பமும் அழகாக உள்ளது என்று பாராட்டி வருகின்றனர்.