பிகில் பாண்டியாம்மாவை பதம் பார்த்த சர்வைவர்.. பட வாய்ப்புக்கு ஆப்பு

தமிழ் சினிமாவில் காமெடியனாக பல படங்கள் நடித்துள்ளார் ரோபோ ஷங்கர். இவரது மகளும்  திரைத்துறையில் பிகில் படத்தின் மூலம் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதுவும் விஜய் எங்க பாண்டிமா ஓட சொன்னா உருண்டு வர என கேட்கும் வசனங்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராததால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சர்வைவர் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு ஒரு சிலர் உடல் நலக்குறைவால் வெளியேற அந்த இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமானவர்களை நிகழ்ச்சியின் உள்ளே அழைத்து வந்தனர். அப்படித்தான் ரோபோ ஷங்கரின் மகளும் சர்வைவர் நிகழ்ச்சிக்கு வந்தார்.

சர்வைவர் நிகழ்ச்சி முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் கடுமையான போட்டிகள் வைத்து உருவானது. இதில் ரோபோ ஷங்கர் மகள் கலந்து கொண்டு விளையாடினார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சீக்கிரமாகவே இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறினார். அதுமட்டுமில்லாமல் இந்த ஷோவில் மூலம் இவருக்கு தோல் பிரச்சனை மற்றும் உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் சர்வைவர் ஷோவில் நீரில் விளையாடியதால் தற்போது இவருக்கு முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து முடி உதிர்வு ஏற்பட்டு வருவதால் இனி படங்களில் நடிக்க முடியாது என கூறி வருகிறார். மேலும் இதில் இருந்து மீள்வதற்காக தற்போது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் கூடிய விரைவில் படங்கள் நடிப்பார் எனவும் கூறி வருகின்றனர்.

இதற்கு ஒரு சில ரசிகர்கள் முடி உதிர்வு எல்லாம் அனைவருக்கும் வருவது தான் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை தேவையில்லாமல் இதையெல்லாம் பெரிதாக பேசி வருகிறார்கள் என கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் கவலைப்படுவது ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என கூறி வருகின்றனர்.

கமலை பார்த்து பயந்த அஞ்சாதே நடிகர்.. வெறுத்துப்போன லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. ...
AllEscort