பிகினி போட்டோ போட்டவுடன் வந்த கேள்வி.. தூள் பட சொர்ணாக்காவா மாறிய அமலாபால்

தமிழ் சினிமாவிற்கு சிந்துசமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். அதன்பிறகு அவர் நடித்த மைனா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே மேலும் பிரபலமானார். அத்துடன் விக்ரம், விஜய், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளார்.

அதன் பிறகு இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின்பு கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து கொண்டார். விவாகரத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்போது அமலா பால் ‘அந்தப் பறவை போல’, ‘கடாவர்’, ‘ஆடுஜீவிதம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அத்துடன் இவர் சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு கொண்டிருக்கிறார். இவற்றைப் பார்க்கும் ரசிகர்கள் என்ன கமெண்ட் அடித்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதே அமலாபாலின் வழக்கம்.

சமீபத்தில் இவர் பிகினி அணிந்து கடற்கரையின் அருகில் போஸ் கொடுத்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த கமெண்டுக்கு பதில் அளித்துள்ளார். அதில் அமலாபால், ‘ஒரு பெண் அணிந்திருக்கும் உடையை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை.

சமூக வலைதளங்களில் பெண்களை குறி வைப்பதை நிறுத்துங்கள். அவளை இஷ்டப்படி வாழ விடுங்கள்’ என்று இணையத்தில் தன்னைக் கிண்டலடித்தவர்களை அமலாபால் விளாசி உள்ளார்.

இருப்பினும் அண்மையில் அமலா பால் தன்னுடைய சகோதரர் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு நடந்த பார்ட்டியில் மது பாட்டிலை கையில் வைத்து நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் அவரே பதிவிட்டு இருந்தது சரிதானா என்பது ரசிகர்களின் கேள்வியாகும். இருப்பினும் இது அவரவர் இஷ்டம் என்பது ஒரு சிலரின் கருத்தாகும்.