பா ரஞ்சித் மீது கடும் கோபத்தில் விக்ரம்.. மார்க்கெட் இல்லனா இப்படியா பண்றது

தமிழில் முன்னணி நடிகரான நடிகர் விக்ரம் தன் மகனான துருவ் விக்ரமின் அறிமுகத்திற்கு பின்னர் சில திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இவர் நடித்த கோப்ரா ,துருவநட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசாகாமல் உள்ள நிலையில் விக்ரம் சற்று சோர்வாக உள்ளாராம். இதனிடையே தன்னுடைய இயக்குனர் ரஞ்சித்திடம் கதையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் தற்போது ரஞ்சித்துக்கு பை,பை சொல்லிவிட்டு வெளிநாட்டிற்கு சென்று உள்ளார் நடிகர் விக்ரம்.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது நடிகர் விக்ரமின் நடிப்பில் கோப்ரா திரைப்படத்தை இயக்கியுள்ளார். எஸ் எஸ் லலித் குமார் தயாரிப்பில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கேஜிஎஃப் புகழ் நடிகை ஸ்ரீநிதி செட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் டீசரில் கணித மேதையாக நடிகர் விக்ரம் காட்டப்பட்டுள்ளார். அதேபோல இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம் 10 கதாபாத்திரங்களில் நடித்து உள்ள நிலையில் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் நடிகர் விக்ரமும் காத்துக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், சிம்ரன், நடிகரும் விக்ரமின் மகனுமான துருவ் விக்ரம் உள்ளிட்டோர் நடித்த மகான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரமிற்கு இத்திரைப்படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்பதே உண்மை. இதனிடையே எப்படியாவது தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் படங்களை கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது மும்முரமாக இயங்கி இறங்கியுள்ளார். இதனிடையே இயக்குனர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ள நடிகர் விக்ரம், பா ரஞ்சித் எப்போது கதையை சொல்லுவார் என்ற ஏக்கத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்.

கபாலி, காலா, மெட்ராஸ் உள்ளிட்ட புரட்சி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். தன்னுடைய திரைப்படங்களில் ஏதாவது ஒரு இடத்தில் அரசியலை குறித்து பேசி விடுவார் இயக்குனர் பா ரஞ்சித். அதே போல இவரது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களிலும் புரட்சி கலந்திருக்கும். இதனால் இயக்குனர் பா.ரஞ்சித்தின் திரைப்படங்களில் நடிப்பதற்காக பல முன்னணி நடிகர்கள் எப்போதும் ஆவலுடன் இருப்பார்கள். அந்த வரிசையில் நடிகர் விக்ரம் தற்போது
பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த நிலையில் பா ரஞ்சித் தாமதமாக்கி வருகிறார்.

இதனால் கடுப்பான விக்ரம் தற்போது தன் வசம் உள்ள அனைத்து படங்களையும் முடித்துவிட்டு ஸ்காட்லாண்ட் நாட்டிற்கு இரண்டு மாதங்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டு உள்ளார். சுற்றுலாப் பயணத்திற்கு பின்னர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் ரீதியான கதைக்களத்தை கொண்டுள்ளது என்றும் நடிகர் விக்ரமிற்கு இது ஒரு புதுவிதமான திரைப்படமாக அமையும் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. தன்னுடைய திரைப்படங்களில் தன்னால் முடிந்த அளவிற்கு டெடிகேஷனோடு நடிக்கும் விக்ரம், முதல் முறையாக அரசியல்வாதியாக பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். அட்டக்கத்தி திரைப்படத்திற்குப் பின்னர் மீண்டும் காதல் கதைக் களத்தோடு இத்திரைப்படத்தை இயக்குகிறார் பா ரஞ்சித். நடிகை துஷாரா விஜயன், கலையரசன், சார்பட்டா பரம்பரை புகழ் டான்சிங் ரோஸ் ஷபீர் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஓரின சேர்க்கையாளர்களின் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே இத்திரைப்படத்திற்குப் பின் விக்ரமின் அடுத்த திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.