பிக் பாஸ் சீசன்5 தற்போது லக்சூரி பட்ஜெட்டிற்கு ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து ஒரு குழுவில் இருக்கும் நபர், மற்றொரு குழுவில் இருக்கும் நபரின் கண்ணாடி போன்று செயல்பட்டு பிம்பமாக பிரதிபலிக்க வேண்டும்.

அதன் பிறகு அலாரம் மணி அடித்தவுடன் கண்ணாடியாக நபர் மெய் பிம்பத்தை பற்றி என்ன நினைக்கிறார்களோ அதை பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே நேற்றைய நிகழ்ச்சியில் பிரியங்கா போன்றே ராஜு கண்ணாடியாக பிரதிபலித்தார். பின்பு பிரியங்காவை பற்றி ராஜு என்ன நினைக்கிறாரோ அதை பகிர்ந்து கொள்ளும் சமயத்தில், ‘பாவனியை பற்றி தெரிந்துதான் அவருடன் பழகுவீர்களா?’ என்று ராஜு எதார்த்தமாக பிரியங்காவிடம் கேட்டார்.

அதன் பிறகு பாவனி, ராஜுவிடம் நீங்கள் எந்த அர்த்தத்தில் பிரியங்காவிடம் இப்படி கேட்டீர்கள் என்று கேட்டதற்கு, பின்பு ராஜு உங்களைப் பற்றி நான் கேட்டறிந்த 3 சம்பவத்தை வைத்தே நீங்கள் இப்படித்தான் என்று முடிவெடுத்துவிட்டேன் அதை உங்களை வைத்து விளக்கப்படுத்திக் கொள்ளாமல் பிறகு எப்படி சகஜமாக பேச முடியும். அந்த சம்பவங்களை உங்களுக்கு விளக்கிக் கூற வேண்டுமென்றால் என்னிடம் தனியாக நேரம் இருக்கும்போது வந்து பேசுங்கள் என்று ராஜு கூறியிருந்தார்.

ஒருவேளை பாவனியின் நிஜ வாழ்க்கையைப் பற்றிய ஏதோ ஒரு விஷயம் ராஜுவுக்கு தெரியவர இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம். ஏனென்றால் பாவனி காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு பாவனிதான் அதற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்தன.

ஆகையால் இந்த சம்பவத்தையும் தாமரையிடமிருந்து பாவனி காயினை உடைமாற்றும் அறையில் நாடகமாடி எடுத்ததையும் மனதில் வைத்துத்தான் ராஜு பாவனியிடம் தள்ளியே இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கணிக்கின்றது.

அதேபோல் ராஜு பாய் பாவனியிடமிருந்து மட்டும் விலகுவதற்கு என்ன காரணம் என்பதை விளக்குவதாகவும் சொல்லி இருக்கிறார். ஆகவே கூடிய விரைவில் ராஜு பாவனியை பற்றி என்ன நினைக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.