விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது சுவாரசியத்துடன் விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் என்டர்டைன்மென்ட்டிற்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

அந்த வகையில் சினிமா சினிமா என்ற டாஸ்கின் மூலம் வீட்டில் இருக்கும் 14 போட்டியாளர்களுக்கும் சினிமா கேரக்டர்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டு அந்த கேரக்டராகவே மாறி பிக்பாஸ் வீட்டில் உலாவிகொண்டிருகின்றனர். எனவே நேற்று அந்த டாஸ்க் நிறைவடையும்போது, அக்ஷரா நீலாம்பரியாக மாறி தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியதை இமான் அண்ணாச்சி குறை சொல்லி சுட்டிக்காட்டினார்.

இதேபோன்றுதான் இசைவாணி கடந்த வாரம் நெருப்பு நாணயத்தின் மூலம் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்திய போது அதற்கு கொஞ்சம் கூட வளைந்து கொடுக்காத இமான் அண்ணாச்சி, இசைவாணி உடன் சரி மல்லுக்கு நின்றார். அதன்பிறகு கமல், இமான் அண்ணாச்சியை இளம் தலைமுறையை வளர விடுங்கள் என்று நாசூக்காக கண்டித்தார்.

ஆனால் அதை புரிந்து கொள்ளாத அண்ணாச்சி, மீண்டும் இந்த வாரம் அக்ஷராவை மற்ற போட்டியாளர்கள் முன்பு குறைசொல்லி மட்டம் தட்டி கூறியது, பெரிய மனுஷன் செய்ற வேலையா இது? என பிக் பாஸ் பார்த்த ரசிகர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தியது.

அத்துடன் பாவனி இடமும் இமான் அண்ணாச்சி இதுபோன்ற ஒருசில விவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து அண்ணாச்சி தன்னுடைய வயதையும் பொறுப்பையும் மறந்து இளம் தலைமுறைகளின் குறைகளை சுட்டிக்காட்டி அவர்களை, மனம் நோகும்படி பேசுவது ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

இதை மட்டும் இமான் அண்ணாச்சி தவிர்த்து வீட்டில் இருக்கும் பெரிய மனுஷன் போல் நடந்து கொள்ளலாம். ஆனால் அதை இமான் அண்ணாச்சி செய்ய தவறி விடுகிறார்.ஆகையால் இந்த வாரத்தில் கமலிடம் அண்ணாச்சிசெம டோஸ் வாங்க காத்திருக்கிறார். அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.