பாலிவுட் நடிகருடன் மோதும் பிரபாஸின் பிரம்மாண்ட படம்.. வெளிவந்த அதிரடி அறிவிப்பு.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி படம் மூலம் உலக புகழ் பெற்றவர் தான் நடிகர் பிரபாஸ். அதுவரை தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமே பரிச்சயமான பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு வேர்ல்டு பேமஸ் ஆகிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

பாகுபலி படம் பிரபாஸை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. அப்படத்திற்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட்டும் எகிற தொடங்கியது. தற்போது டோலிவுட்டில் இருந்து அப்படியே பாலிவுட்டிற்கு பிரபாஸ் தாவியுள்ளார். தற்போது பிரபாஸ் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சைப் அலிகான், கிர்த்தி சனோன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகானும், சீதா கதாபாத்திரத்தில் கிர்த்தி சனோனும் நடிக்கிறார்கள்.

ஹிந்தி, தெலுங்கு தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே உருவாக தொடங்கி விட்டது.

இதில் மற்றொரு செய்தி என்னவென்றால் அதே நாளில் தான் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் படமும் வெளியாக உள்ளதாம். அப்படி இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியானால் மிகப்பெரிய இரண்டு நடிகர்களின் படங்களுக்கு இடையேயான பாக்ஸ் ஆபிஸ் மோதலாக இருக்கும் என கூறுகின்றனர்.

தரம் தாழ்ந்து போன வடிவேலு.. சிவகார்த்திகேயனை பார்த்து கத்துக்கோங்க ஜி!

வைகைப்புயல் வடிவேலு ஆரம்ப காலங்களில் சினிமாவுக்கு வருவதற்கு பலரை நாடியுள்ளார். அப்போது நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுக்கு சிறுசிறு கதாபாத்திரங்கள் கொடுத்தார். அதன் பிறகு வடிவேலு மதுரையில் இருந்து வந்ததால் விஜயகாந்த் தான் நடிக்கும் ...