பாலிவுட்டில் நடிப்பீர்களா.? அதிர்ச்சியான பதிலைக் கூறிய சூர்யா

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்ற சில நடிகர், நடிகைகளின் அந்தஸ்து தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தற்போதுள்ள முன்னணி நடிகர்களும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் படங்களில் நடிக்க சூர்யாவுக்கு ஆசை உள்ளதா என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமீபகாலமாக சூர்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சூர்யாவின் சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. சூர்யா தொடர்ந்து தனது படங்கள் மூலம் இலக்கை அடைந்து வருகிறார்.

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் ஓடிடிவியில் வெளியான நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. நடிகர் சூர்யாவுக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை புரோமோஷன் செய்வதற்காக கேரளா சென்றுள்ளார். அப்போது சூர்யாவிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் பாலிவுட் படங்களில் நடிப்பீர்களா, அங்கு நடிக்க உங்களுக்கு ஆசை இருக்கிறதா என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த சூர்யா பாலிவுட் சென்றால்தான் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தென்னிந்திய நடிகர்கள் அனைவரும் தங்களது முழு திறமையும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

சொல்லப்போனால் பாலிவுட் சினிமாவை கூட எங்களால் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என சூர்யா கூறியுள்ளார். மேலும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் கடைசியாக சூர்யா கூறினார். நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருவது போல் மிக விரைவில் சூர்யாவும் பாலிவுட்டில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.