பாலா படத்தில் வெற்றிமாறன் பட நடிகை.. என்ன பாடு படுத்த போறாரோ!

பாலா என்னதான் வித்தியாச வித்தியாசமான படங்களை வெளியிட்டாலும் வசூல் ரீதியாக அந்த படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறாததால் அவருக்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் படத்திற்கு படம் ஏதாவது ஒரு புதுமையை செய்து கொண்டுதான் இருக்கிறார்.

பாலா படங்களை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பாலா ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து.

நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா, பாலா படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டு மாஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது மிகப் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார்.

இந்நிலையில் பாலா படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும் அவரது படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். அந்த வகையில் விரைவில் பாலா மற்றும் சூர்யா இணையும் புதிய படம் ஒன்று தொடங்க உள்ளது.

இந்தப்படத்தில் நாயகியாக வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சும்மா சொல்லக்கூடாது. எந்த அளவுக்கு இறங்கி நடிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு நடிப்பில் மாஸ் காட்டி வருகிறார்.

அந்த வகையில் பாலா கூட்டணியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் அவருடைய நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமில்லாமல் பொது காம்பினேஷன் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சத்தை தொடும் என்பதில் ஆச்சரியம் இல்லை தானே. “வரணும், பழைய பன்னீர் செல்வமா பாலா திரும்ப வரணும்”