பாலா படத்தில் நடிக்க தயக்கம் காட்டும் நடிகர்கள்.. வெளிவந்த பகிர் உண்மைகள்

இயக்குனர் பாலா புது விதமான முயற்சிகளை கையாளக் கூடியவர். இவருடைய படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களை படாதபாடு படுத்தி விடுவாராம் பாலா. அது மட்டுமல்லாமல் அவர்களின் அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றிவிடுவார். பாலா ஒரு படத்தை முடிப்பதற்கு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்வார்.

இவர் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வேறு படங்களில் ஒப்பந்தம் செய்ய முடியாது. ஏனென்றால் பாலாவின் படத்தில் அந்த நடிகர், நடிகைகளின் தோற்றங்கள் முற்றிலுமாக மாறுபட்டு இருக்கும். இதனால் இதே தோற்றத்துடன் அடுத்த படங்களில் அவர்களால் நடிக்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் பாலா சில நடிகர், நடிகைகளை அடித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. பாலா இவ்வளவு சிரமப்பட்டு படங்கள் எடுத்தாலும் அவர் கொடுத்த ஹிட் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். பாலாவின் படங்கள் நன்றாக இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்காததால் ஹட் பட பட்டியலில் வராது.

பாலாவின் படங்களில் பெருமானான கிளைமாக்ஸ்களில் ஹீரோயின் இறப்பது அல்லது எதிர்மறை மற்றும் வன்மமான முடிவுகள் ஆகவே இருக்கும். இதனால் இவருடைய படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்களும் வருகிறது. இதனால் பல நடிகர், நடிகைகளும் பாலாவின் படத்தில் நடிக்க தயக்கம் காட்டுகிறார்கள்.

பாலாவின் படங்கள் தேசிய விருது அளவுக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் நடிகர், நடிகைகளை இவர் படுத்தும் பாட்டால் இவர் படங்களில் நடிக்க எல்லோரும் தயக்கம் காட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கமாட்டாராம் பாலா.

இதற்கு எடுத்துக்காட்டாக நான் கடவுள் படத்தில் ஆர்யா பெற்றோர், பாலாவிடம் சண்டை போட்டு சர்ச்சையானது. அதேபோல் இதே படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜாவும் இப்படத்திற்காக அவர் எவ்வளவு சிரமப்பட்டு உள்ளார் என்றும் பாலாவிடம் எவ்வளவு திட்டு வாங்கினேன் என்பதையும் கூறியிருந்தார்.