பாலா ஓகே, ஆனா மிஷ்கின் சவகாசமே வேண்டாம்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு

சில பல தோல்விகளுக்கு பின்னர் நடிகர் விஷால் தற்போது நிறுத்தி நிதானமாக தனக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இரண்டாவது முறையாக ஆர்யாவுடன் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து வீரமே வாகை சூடும் படத்தில் விஷால் பிசியாக நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் வீரமே வாகை சூடும் படம் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான பாண்டியநாடு, தாமிரபரணி போன்ற படங்களை போல பக்கா எண்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி வருகிறதாம். இந்நிலையில் இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

பிண்ணனியில் சேகுவேரா படத்துடன் விஷால் இருக்கும் வீரமே வாகை சூடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஷாலிடம் இயக்குனர் பாலாவுடன் மீண்டும் இணைவீர்களா என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஷால், “பாலா அண்ணன் எப்போ கூப்பிட்டாலும் நான் ரெடியா இருக்கேன். ஒரு சாதாரண ஹீரோவா இருந்த என்ன ஒரு நடிகனாக்கி ஆழம் பார்த்தது பாலா தான். நான் மட்டுமில்ல எத்தனையோ பேர் அவர் கைபட்டு நடிகனாகிருக்காங்க. நிச்சயம் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ணுவேன்” என கூறியுள்ளார்.

அதே சமயம் இயக்குனர் மிஷ்கின் குறித்து பேசிய விஷால், “அவர் மேல எனக்கு கோபம் இல்லைனு சொல்ல மாட்டேன். ஒரு நடிகனா என்னை செதுக்குனதுல அவருக்கும் பங்கு இருக்கு. ஆனா ஒரு தயாரிப்பாளரான எனக்கு அவர் செய்தது பச்சை துரோகம். எந்த ஒரு தயாரிப்பாளராலும் அதை தாங்கி கொள்ளவே முடியாது. அவர் கூட திரும்ப படம் பண்ண வாய்ப்பே இல்லை” என அதிரடியாக கூறிவிட்டார்.