பாலாவை தூக்கிவிட சூர்யா எடுக்கப்போகும் ரிஸ்க்.. எம்ஜிஆர் பட பாணியில் அமைந்த கதை

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சிறுத்தை சிவா, பாலா, சுதா கொங்கரா படம் என வரிசையாக பல படங்களுக்கு சூர்யா கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் சூர்யாவின் 41 வது படத்தை பாலா இயக்குகிறார். இப்படத்தின் சூட்டிங்காக நடிகர் சூர்யா கன்னியாகுமரி சென்றுள்ளார். சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவியது.

இந்த படத்திற்கு சூர்யா மூன்று மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஏனென்றால் பாலா எப்போதுமே நீண்ட நாட்கள் ஒரு படத்தை எடுப்பார் என்று முன்னதாகவே உஷாரான சூர்யா இந்த படத்திற்கு கம்மியான நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் தன்னை அழகாக காட்ட வேண்டும் எனவும் பாலாவிடம் சூர்யா கோரிக்கை வைத்துள்ளார். இந்த படத்தில் சூர்யா விசைப்படகு ஓட்டும் படகோட்டி ஆக நடித்து வருகிறார். அதனால்தான் கடல் சார்ந்த இடமான கன்னியாகுமரியில் இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே படகோட்டி என்ற படத்தில் எம்ஜிஆர் இதே கேரக்டர் ரோலில் நடித்த அந்தப் படமும், அதில் இடம்பெற்ற பாடல்களும் செம ஹிட் ஆனது. இப்போது சூர்யாவும் அதேபோல் படகோட்டி ஆக நடிப்பதால் இது மீனவர்கள் சம்பந்தப்பட்ட கதை என்பது தெளிவாக தெரியவருகிறது.

இப்படத்தில் பாலா மீனவர்களுக்கு ஏற்படும் அநீதிகளை கதைக்களமாக எடுக்க உள்ளார் என கூறப்படுகிறது. எப்போதுமே பாலா படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நெகட்டிவாக தான். அதேபோல் இந்த படத்திலும் நிச்சயமாக நெகட்டிவ் கிளைமேக்ஸ் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.