தமிழ் தொலைக்காட்சியில் டாப் 5 இடங்களில் ஒன்றான சீரியல்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

வில்லத்தனம் செய்துவரும் வெண்பா, தற்போது இவர்கள் இருவரையும் சட்டபூர்வமாக பிரிக்க வேண்டும் என்று நோக்கத்தோடு கண்ணம்மாவிடம், பாரதியை விவாகரத்து செய்யும்படி மிரட்டுகிறாள். விவாகரத்து செய்த பிறகே உனது மகளை உனக்கு தருவேன் என்றும் பிளாக்மெயில் செய்கிறாள்.

இது ஒருபுறமிருக்க, கர்ப்பமாக இருக்கும் அஞ்சலி, வெண்பா எழுதி கொடுத்த இரண்டு டோஸ் மாத்திரையை போட்டுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற சந்தேகத்தில் இருக்கிறாள். அப்போது திடீரென அவள் மீது பல்லி வந்து விழுகிறது, அதிர்ச்சி அடைந்த அஞ்சலி மாத்திரை குறித்து குழப்பம் அடைந்தாள்.

அச்சமயம் அங்கு வந்த மாமியார் சௌந்தர்யா மாத்திரையை யார் கொடுத்தது என்று கேட்கும்போது, வெண்பா என தெரிய வந்தது. அப்போது இரண்டு டோஸ் மாத்திரையில் இருந்து ஒரு டோஸை எடுத்து வைத்துவிட்டு மீதம் உள்ள ஒரு மாத்திரையை மட்டும் அஞ்சலியை சாப்பிடச் சொல்கிறாள்.

அவளே ஒரு அரை குறை டாக்டர். அவள் சொல்வதை நீ கேட்கவேண்டாம் என்றும் சௌந்தர்யா, அஞ்சலிக்கு அறிவுரை கூறுகிறார். என்ன தான் மாத்திரையை அஞ்சலி சாப்பிட்டாலும் அவளுக்கு வழக்கம் போல் நெஞ்சு வலியானது மீண்டும் வருகிறது. இது அஞ்சலிக்குமீண்டும் மீண்டும் பயத்தை அதிகரிக்கிறது.

தற்போது இந்த சீரியலின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், பாரதி கண்ணம்மாவின் கதை முடிவை நோக்கி செல்வது போலவே தெரிகிறது.