பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்ததற்கு பாக்கியாதான் காரணமாம்.! எந்தப் பாக்கியமும் இல்லாத பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பணப் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பாக்யா மீண்டும் அடுத்த பிரச்சனையை எதிர்கொள்ள தயார் ஆகிறார். பாக்யாவின் மருமகள் ஜெனி கர்ப்பமாக இருந்தார்.

தற்போது ஜெனிக்கு கர்ப்பம் கலைவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. வயிற்று வலியால் துடிக்கும் தன் மருமகள் ஜெனியை பாக்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு கரு கலைந்து விட்டதாக கூறுகிறார்.

இதை கேட்ட ஜெனி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் பாக்யாவை அவரது மாமியார் திட்டுகிறார். ஜெனியின் கரு கலைந்ததற்கு நீ தான் காரணம் என்று பாக்கியாவை குற்றம் சாட்டுகிறார்.

உன்னால் வீட்டில் நடந்த பிரச்சினைகளால் ஜெனிக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால் கரு கலைந்து விட்டது என்று கோபமாக பேசுகிறார்.அதற்கு பாக்கியா பதில் பேச முடியாமல் அதிர்ந்து நிற்கிறார். இதைக் கேட்ட ஜெனி தன் மாமியார் பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.

வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பாக்யாதான் காரணம் என்பது போல அவரது மாமியார் பேசுகிறார். போகிற போக்கை பார்த்தால் டைரக்டர், பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்ததற்கு கூட பாக்கியாதான் காரணம் என்று கூறிவிடுவார் போல.

இப்படி எந்தப் பாக்கியமும் இல்லாத இவருக்கு பாக்கியலட்சுமி என்று பெயர். இதைப்பார்த்த இல்லத்தரசிகள் இந்த டைரக்டர் பாக்யாவை நிம்மதியாக விட மாட்டாரு போல என்று திட்டி தீர்க்கின்றனர்.