பாரதியார் பாடலை பாடி மாணவர்களுக்கு அறிவுரை கூறிய சூர்யா.. மரணம் எதற்கும் தீர்வு கிடையாது

தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய மாணவர்களின் படிப்பிற்கு உதவும் நடிகர் சூர்யா நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார். இப்போது மிகவும் கவலையாக சமூக வலைத்தளங்களில் மாணவர்களுக்காக மிகவும் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

சமீபத்துல செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அனிதா மாதிரி டாக்டர் கனவுல இருக்கிற எந்த மாணவர்களுக்கும் மரணம் ஒரு தீர்வு இல்லை, என்பதை குறிக்கும் விதமாக சூர்யா மாணவர்களுக்கு கொடுத்த அட்வைஸ்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே மாணவ, மாணவிகள் தான் வாழ்க்கையில் அச்சமில்லா நம்பிக்கையோடு இருக்கணும் ஒரு அண்ணனாக நான் வேண்டி கேட்கிறேன்.

உனக்கு போன வாரம், போன மாசம், முன்னாடி இருந்த ஏதோ ஒரு பெரிய கவலை வேதனை இப்ப இருக்கா யோசிச்சு பாருங்க நிச்சயமாக குறைந்து போய் இருக்கும். இல்லாம கூட போய் இருக்கும். ஒரு பரிட்சை உயிரோடு பெருசில்ல, உங்க மனசுக்கு கஷ்டமா இருக்கா. நீங்க நம்புறாங்க, உங்களுக்கு புடிச்ச உங்க அப்பா, அம்மா இல்ல பெரியவங்க, நண்பர்கள் ஆசிரியர்கள் யார்கிட்டயாவது மனசு விட்டுப் பேசுங்க.

எல்லாத்தையும் இந்த பயம், கவலை, விரக்தி வேதனை இதெல்லாம் கொஞ்ச நேரத்தில  மறையுரை விஷயங்கள்.