பாரதிக்கு கடைசியாக கேக் ஊட்டிய கண்ணம்மா வீடியோ! வெண்பா இல்ல நீங்களும் இல்லன்னா செம போர்..

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன பாரதிகண்ணம்மா சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் சீரியல் நடிகை ரோஷினி, சமையல் அம்மாவாகவே வாழ்ந்து ரசிகர்களிடையே பெரும் புகழையும் பெற்றிருந்தார்.

இன்னிலையில் ரோஷினிக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து விட்டதால், பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். ஆகையால் இறுதி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரோகினிக்கு பாரதிகண்ணம்மா சீரியல் குழுவினர் கேக் வெட்டி வழியனுப்பி வைத்துள்ளனர்.

இந்த வீடியோவில் பாரதிகண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் பெண்ணெட் ரோஷினியை, ‘எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்தியுள்ளார்.

அத்துடன் பாரதியாக நடிக்கும் அருண் உள்ளிட்ட பலரும் ரோகினியின் எதிர்கால முயற்சிக்கு தங்களுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். எனவே இந்த வீடியோ பதிவானது தற்போது சோஷியல் மீடியாவில் ரோஷினியின் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும், ஆர்வத்துடன் பார்க்கப்பட்டும் வருகிறது.

மேலும் பாரதிகண்ணம்மா சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வெண்பாவும், கதாநாயகியாக நடிக்கும் ரோகிணியும்  சீரியலில் இருந்து விலகுவது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இவர்கள் இருவரும் இல்லை என்றால் இனி சீரியல் செம போர் அடிக்கும் என்றும் சோசியல் மீடியாவில் தங்களுடைய வருத்தத்தை பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் வாழ்க்கைக்கு உத்வேகம் கொடுக்கும் கதை அம்சம் கொண்ட சிறந்த 8 தமிழ் திரைப்படங்கள்.. அதுவும் ஆண்டவர் வேற லெவல்

வணக்கம் சினிமாபெட்டை வாசகர்களே. நமது சினிமா பேட்டை வலைதளம் மூலமாக பல சிறப்புக் கட்டுரைகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு தமிழ் சினிமாவில் வாழ்க்கைக்கு உத்வேகம் ...