விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் கடந்த சில வாரங்களாக டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள காட்சிகளை பற்றிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது..

அதில் கண்ணம்மா தன் குழந்தை லக்ஷ்மியை ஸ்கூலில் விடுவதற்காக ஆட்டோவில் செல்கிறார். அப்போது திடீரென ஆட்டோ பழுதாகி நின்று விடுகிறது. அந்த வழியாக பாரதி தன் குழந்தை ஹேமாவை அழைத்துக் கொண்டு காரில் வருகிறார்.

இதைப்பார்த்த ஹேமா கண்ணம்மாவிற்கு உதவும்படி பாரதியிடம் கேட்கிறார். தன் குழந்தைக்காக பாரதி, கண்ணம்மாவிற்கு உதவ முன்வருகிறார். அப்போது கண்ணம்மா வேண்டுமென்றே பாரதியை உரசி வம்பிழுக்கிறார். இதை கண்டு டென்ஷனாகும் பாரதி ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.

உடனே கண்ணம்மா தான் இருக்கும்  லொகேஷனை  வெண்பாவுக்கு அனுப்பி வர சொல்கிறார். அங்கு வரும் வெண்பா இந்தக் காட்சியைப் பார்த்து மிகுந்த டென்ஷன் ஆகிறார். எதேச்சையாக அங்கு வரும் கண்ணம்மாவின் தோழி துளசி, பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டதாக கூறுகிறார். இதை கேட்டு வெண்பா காண்டாகிறார்.

இந்த காட்சிகள் தான் வரும் வாரம் பாரதி கண்ணம்மாவில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி இந்த காட்சியுடன் தொடரில் இருந்து வெளியேறி விட்டதாக தெரிகிறது.

அதனால் இந்த வாரம் ரோஷினி நடித்த இந்தக் காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தெரிகிறது. புது கண்ணம்மாவாக நடிகை வினுஷா நடிக்கும் காட்சிகள் வரும் வாரங்களில் ஒளிபரப்பாகும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.