பாரதிகண்ணம்மாவில் உயிருக்கு போராடிய லட்சுமி.. டாக்டர் அப்பாவை அடிமையாக்கிய சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் தற்போது தந்தை, மகள் இடையான பாசப் பிணைப்பில் ஆன கதை களமாக மாறி வருகிறது. தந்தையின் பாசத்திற்காக ஏங்கும் லட்சுமி பாரதிதான் தந்தை என தெரிந்தவுடன் நெருங்கி பழகி வருகிறாள்.

லட்சுமியின் நடவடிக்கைகளால் கண்ணம்மாவுக்கு சிறிது சந்தேகமும் வந்துள்ளது. இந்நிலையில் பிக்னிக் சென்ற இடத்தில் நீச்சல் குளத்தில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் விளையாடி வருகிறார்கள். அப்போது பாரதி இடுப்பளவு தண்ணீரில் மேல் இருவரும் போகக்கூடாது என எச்சரிக்கிறார்.

அந்த சமயத்தில் பாரதிக்கு போன்கால் வர தனியாக பேசப் போகிறார். அப்போது ஹேமா விளையாடிக்கொண்டே பந்தை தூரமாக போட்டு விடுகிறாள். இதனால் ஹேமா நான் போய் எடுத்தவரின் என்ன சொல்கிறாள். ஆனால் லட்சுமி நான் போய் எடுத்து வருகிறேன் என்று செல்கிறாள்.

ஆனால் லட்சுமி ஒரு கட்டத்திற்கு மேல் செல்ல தண்ணீரில் முழுகுகிறாள். மேலும், நீச்சல் தெரியாத லட்சுமி மூச்சு விட முடியாமல் தண்ணீரில் முழுகி உயிருக்கு போராடுகிறாள். இதைப் பார்த்து கண்ணம்மா பதற, உடனே பாரதி தண்ணீருக்குள் நீந்தி லட்சுமியை காப்பாற்றுகிறார்.

பின்பு லட்சுமிக்கு பாரதி முதல் உதவி செய்கிறார். கண்விழித்துப் பார்த்த லட்சுமி தேங்க்யூ டாக்டர் அப்பா, லவ் யூ சோ மச் என கூறுகிறாள். இதைக் கேட்ட பாரதி லக்ஷ்மியை கட்டி அணைத்துகிறார். பாரதி ஒரு டாக்டராக இருந்து உதவி செய்தாலும், லட்சுமிக்கு உதவி செய்ததில் அவரது தந்தை பாசம் தெரிகிறது.

இதுவரை சந்தேக புத்தியில் இருந்த பாரதி தற்போது மகளின் பாசத்துக்கு அடிமை ஆகியுள்ளார். மேலும் ஒரே கதையை உருட்டி வந்த பாரதி கண்ணம்மா தொடர் தற்போது சென்டிமென்ட் ஆல் ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது. மேலும் இதே போல் பல சுவாரசியமான கதைக் களத்துடன் பாரதிகண்ணம்மா தொடர் வர இருக்கிறது.