பாபா படத்தில் மேக்கப்பினால் வந்த பிரச்சனை.. கேமராமேன் சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பல எதிர்மறையான கருத்துகள் அப்போதே சந்தித்து தான் உள்ளார். அப்படிப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கொண்டு தான் தற்போது வரை சூப்பர் ஸ்டாராக நிலைத்து இருக்கிறார் ரஜினி. அந்த வகையில் பாபா படத்தில் மேக்கப்பினால் வந்த பிரச்சனை, அதற்கு ரஜினி எடுத்த முடிவு என்ன என்பது போன்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, நம்பியார் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் பாபா. மக்கள் எதிர்பார்த்த அளவு இந்த படம் ஓடாவிட்டாலும் ரஜினியின் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது என்று தான் கூற வேண்டும். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினி 50 நாட்களில் முடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்ததாராம்.

அதன் பிறகு படம் ஆரம்பித்து பாதி முடிந்ததாம். பின்னர் படத்தில் எடுத்த காட்சிகளை போட்டு பார்த்த கேமரா மேனுக்கு திருப்தி ஏற்படவில்லையாம். அப்போது தான் ரஜினிக்கு போட்ட மேக்கப் செட்டாகவில்லை என்பது தெரியவந்தது . அப்போது போட்ட மேக்கப் எல்லாம் வெடிக்கிறது என்றும், அதனால் ரஜினியிடம் 20 நாள் கழித்து சூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தனர்.

ஆனால் அதற்கு ரஜினி இந்த ஒரு காரணத்திற்காக ஷூட்டிங்கை தள்ளி போட வேண்டாம், இப்பொழுது லாங் சாட் எல்லாம் முடித்து விடுவோம் என தெரிவித்திருந்தார். மேலும் குளோஸ் அப் ஷார்ட்டுக்கு எல்லாம் அதே மாதிரி டிரஸ் மீண்டும் போட்டு அதையும் எடுத்து விடலாம் என கூறி நடித்து முடித்தார்.

மேலும் சில அரசியல் சர்ச்சைகளும் இப்படத்தை சுற்றி இருந்து வந்த நிலையில் பல விநியோகஸ்தர்களுக்கு இப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ரஜினி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களை கூப்பிட்டு எவ்வளவு பணம் நஷ்டம் அடைந்தார்களோ, அதை அவரே திருப்பி கொடுத்துள்ளார்.

தன்னை நம்பி வந்தவர்கள் நஷ்டம் அடையக்கூடாது என்ற எண்ணத்தில் ரஜினி இதை செய்துள்ளார். இதன் காரணமாகவே ரஜினியை திரையுலகினர் பலருக்கும் பிடிக்கும் என்கின்றனர். எந்த ஒரு ஹீரோவும் செய்யாத இந்த காரியத்தை ரஜினி செய்ததை அறிந்த ரசிகர்கள் அவரை இன்றளவும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.