சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான சீரியல் நடிகை சரண்யா துராட்டி, முதலில் புதிய தலைமுறை என்ற செய்தி சேனலில் நான்கு வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். இவருடைய பணியை போற்றி புதியதலைமுறை தமிழன் விருது என்ற விருதுயும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு சில மாதம் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். பின்பு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தியா திரும்பிய சரண்யா, மீண்டும் நியூஸ் 18தமிழ் நாடு எந்த செய்தி சேனலில் மூத்த செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

அதன்பிறகுதான் 2015ஆம் ஆண்டு வெளிவந்த ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தில் நடித்திருப்பார். கடந்த 2017 முதல் 2019 வரை விஜய் டிவியின் பிரபல சீரியலான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் சரண்யா விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார் .

இதன் மூலம் விஜய் தொலைக்காட்சியின் புதுமுக நடிகை என்ற விருதும் இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு விஜய் டிவியின் மற்றொரு சீரியல் ஆன ஆயுத எழுத்து என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார்.

இந்த சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடரின் தெலுங்கு மொழி மறுஆக்கம். அத்துடன் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற தொடரில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், இந்த சீரியலில் சரண்யாவிற்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா நடித்திருப்பார்,

இப்படி சின்னத்திரையில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கும் சரண்யா, தற்போது மீண்டும் விஜய் டிவியில் புதிய சீரியல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் லட்சுமி அம்மாவாக நடித்த நடிகை ஷீலா, நடிகை சரண்யாவிற்கு அம்மாவாக நடிக்க உள்ளார். எனவே இந்த தகவலை நடிகை ஷீலா பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.