பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை தொக்க தூக்கிய பாரதிகண்ணம்மா சீரியல்.. இனி தான் இருக்கு ஆட்டம்!

விஜய் டிவியின் டாப் சீரியல்களான பாரதிகண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி தற்போது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் திறப்பு விழாவிற்கு ஆயத்தமாகி உள்ளனர்.

இன்னிலையில் இந்த விழாவிற்கு சீரியல் பிரபலங்கள் பலரும் வருகை தருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் காவியா அறிவுமதி, பாரதிகண்ணம்மா சீரியலின் கதாநாயகன் பாரதி என்கின்ற அருண்பிரசாத் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை காவியா அறிவுமதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் பாரதி, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா? என்று ஆர்வத்துடன் கேட்கின்றனர்.

அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கவிருக்கும்  டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் திறப்பு விழாவிற்கு பாரதி வருகை தரப் போகிறாரா? என்று சிலர் தங்களுடைய கணிப்பை கேள்விகளாக காவியாவிடம் எழுப்புகின்றனர்.

அத்துடன் அருண் பிரசாத், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தை நட்சத்திரமான நடித்துக் கொண்டிருக்கும் பாண்டியன் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.