விஜய் டிவியில் எப்பொழுதும் சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாமல் பல புதிய புதிய சீரியல்களை மக்களுக்கு பிடித்தமான கதைக்களத்துடன் ஒளிபரப்பு செய்வர். அந்த விதமாக சில மாதங்களுக்கு முன் புதிதாக ஒளிபரப்பப்பட்ட 2 சீரியல்கள்தான் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ மற்றும் ‘நம்ம வீட்டு பொண்ணு’ ௭ன்னும் 2 பிரபல சீரியல்கள்.

ஒளிபரப்பான நாளிலிருந்தே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த சீரியல்கள் விருவிருப்பான கதைக்களத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது மேலும் மக்களை குஷிப்படுத்தும் விதமாக இந்த இரண்டு சீரியல்களும் மகாசங்கமத்தில் இணைய உள்ளன.

மேலும் மதியம் 2:30 முதல் 3:30 மணி வரை ஒரு மணி நேரம் இந்த இரண்டு சீரியல்களின் மகாசங்கம எபிசோடுகள் ஒளிபரப்பாகி மக்களை கவர காத்துக் கொண்டுள்ளன. இதைத்தொடர்ந்து விஜய் டிவியின் மற்றுமொரு இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்களான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்னும் இந்த இரண்டு பிரபல சீரியல்களும் மகா சங்கமத்தில் இணைந்து கலக்க காத்துக்கொண்டிருக்கின்றன.

தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்திக்- வசு திருமண வைபோகம் அமோகமாக அரங்கேறி வருகிறது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் தற்சமயம் குடும்பத்தில் சில சலசலப்பு மற்றும் சண்டைகள் நடந்து வருகிறது. எனவே கதைக்களத்தில் ஒரு சிறிய மகிழ்ச்சியான மாற்றத்திற்காக இந்த இரண்டு சீரியல்களையும் மகா சங்கத்தில் இணைக்க உள்ளன.

இவ்வாறு மதியம் 2 சூப்பர்ஹிட் சீரியலும் இரவு 2 சூப்பர்ஹிட் சீரியலும் இணைந்து மாறி மாறி மக்களுக்கு மெகா ட்ரீட் கொடுக்க தயாராகி வருகின்றனர்.

இது மகா சங்கமம் இல்லை நான்கு சீரியல்கள் கலக்கப்போகும் மெகா சங்கமம். இதனை வரவேற்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர். அடுத்த வாரத்தில் இருந்து இந்த மகாசங்கம எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என மக்களால் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்படுகிறது.