பாண்டியன் ஸ்டோர்ஸ்சை மிஞ்ச போகும் அடுத்த புது சீரியல்.. கமிட்டான ரொமான்டிக் ஜோடி!

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஏற்கனவே பல பிரபலமான சீரியல்கள் நம்பர் ஒன் இடத்திற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இவற்றை பின்னுக்குத் தள்ளும் விதமாகவும் மக்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாகவும் மற்றொரு புதிய சீரியலை களமிறக்க உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் வெற்றி தொடரை இயக்கி வழங்குபவர் இயக்குனர் சிவசேகர். இவர் தற்பொழுது ஒரு பெரிய வெற்றி கூட்டணியுடன் இணைந்து மற்றொரு மாபெரும் நெடுந்தொடரை உருவாக்கப் போகிறார்.

இந்தப் புதிய சீரியலில் சின்னத்தம்பி மற்றும் அன்புடன் குஷி போன்ற வெற்றித்தொடர்களில் நடித்த கதாநாயகன் பிரஜின் பத்மநாபன் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் அறிமுகமாகி, பின் ஆயுத எழுத்து என்னும் பிரபல தொடரில் நடித்த சரண்யா அவர்கள் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர்.

மேலும் இதில் பழம்பெரும் மூத்த நடிகை லதா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம். நடிகை லதா அவர்கள் ஏற்கனவே விஜய் டிவியின் ‘சுந்தரி நீயும் சுந்தரி நானும்’ ௭ன்னும் மெகா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து பெரும் வெற்றி கண்டவர்.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காதல் ரொமான்ஸ் பாசம் என அனைத்திற்கும் பஞ்சமில்லாத போது அதே இயக்குனர், தற்பொழுது  புதிய சீரியலில் இயக்க இருப்பது மக்களுக்கு பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஏற்கனவே ‘முத்தழகு’ என்னும் புதிய நெடுந்தொடர் நவம்பர் மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இயக்குனர் சிவசேகர் இயக்கும் பெயர் சூட்டப்படாத வெற்றிக் கூட்டணியை கொண்ட மேலும் ஒரு புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகமாக தூண்டுகிறது.