பாண்டியன் ஸ்டோர்ஸில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. வைரலாகும் செல்பி புகைப்படம்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது தனத்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மூர்த்தியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் விஜய் டிவியின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஷூட்டிங்கை தயாரிப்பு நிர்வாகம் மிக பிரமாண்டமாக செய்து வருகிறது. விஜய் டிவியின் சீரியல்களில் ஸ்பெஷல் எபிசோடுகள் நடைபெற்றால் அதில் அந்த சேனலின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்வது வழக்கம்.

அது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரியோ இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ரியோ தவிர வேறு சில முக்கிய நடிகர்களும் இருப்பார்கள் என்று தெரிகிறது.

பிக்பாஸ் பிரபலமான ரியாவின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸின் பெயர் சூட்டும் விழாவுக்கான காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்பெஷல் எபிசோடை காண ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போன்று தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் செஃப் தாமு உட்பட பல விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி, செந்திலுக்கே டஃப் கொடுத்த வெண்ணிறாடை மூர்த்தி.. 3 தலைமுறை நடிகருக்கு என்ன ஆச்சு

சினிமா துறையில் ஒருவரின் நடிப்பு காலம் கடந்து பேசப்பட்டால் அவர் உண்மையான திறமையான நடிகர் என்று சொல்லலாம். அப்படி பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஒதுங்கி இருக்கின்றனர். அப்படி ஒதுங்கி ...
AllEscort