பாடையில் வைத்தது டம்மி லட்சுமி அம்மாவாம்.. படப்பிடிப்புத் தளத்தில் மீனா எடுத்த வைரல் வீடியோ!

மூன்று வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற நெடுந்தொடர் மக்கள் மத்தியில் அதிக பார்வையாளர்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெடுந்தொடரானது ஒரு வித்தியாசமான குடும்ப தொடராகும். இதனுடைய படப்பிடிப்பு வீடியோ ஒன்று யூடியூபில் வைரலாகி வருகிறது.

அண்ணன் தம்பி நால்வருக்கும் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலா, தற்போது கதையில் திடீரென்று இறந்துவிடுகிறார். இவருடைய இறுதி நாள் அன்று எடுக்கப்பட்டிருந்த படப்பிடிப்பை அதே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் மீனா கதாபாத்திரமான நடிகை ஹேமா யூட்யூபில் பதிவு செய்துள்ளார்.

ஷீலா அம்மா தனது பதினெட்டு ஆண்டுகால சின்னத்திரை வரலாற்றில், பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகமே தனக்கு அதிக ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும். இந்த சீரியலில் இருந்து தற்போது விலகுவது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகும் பதிவு செய்துள்ளார்.

இவரின் இந்த படப்பிடிப்பின்போது இவருக்கு பதிலாக டூப் போட கொண்டுவந்த பொம்மையையும் இந்த வீடியோவில் காட்டியுள்ளனர். ஷீலா அம்மாவும், நடிகை ஹேமாவும் ஒரு தனி அறையில் மூன்று ஆண்டு காலமாக சூட்டிங் டைமிங்கில் ஒன்றாக இருந்து வந்துள்ளனர்.

தற்போது ஷீலா அம்மா தன்னுடன் இல்லாதது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவர் இல்லாத இந்த அறை தனக்கு வெற்றிடமாக தெரிவதாகவும் வருத்தத்தை பதிவு செய்து உள்ளார் நடிகை ஹேமா.

இவர்கள் பதிவிட்டிருந்த இந்த வீடியோ யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.