தமிழ் சின்னத்திரையில் டாப் 5 இடங்களில் ஒன்றான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நிகழ்ச்சியானது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷீலாவின் கதாபாத்திரம் முடிவு பெற்றது. நடிகை ஷீலா மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் வைத்திருக்கும் பாசத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் அம்மா கதாபாத்திரம் இறந்து போவதாக கதை சென்று கொண்டிருக்கிறது. அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஷீலா பாடையில் படுத்திருப்பது போலவும், இறந்த பிறகு செய்யக்கூடிய அனைத்து இறுதி சடங்குகளும் நிஜமாக நிகழ்வது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்த காட்சிகளில் எல்லாம் நடிகை ஷீலா தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை முழுவதுமாக வெளிப்படுத்தி, இறுதியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். பொதுவாக சின்னத்திரையிலோ அல்லது வெள்ளித்திரையிலோ இறந்தது போன்ற காட்சியில் நடித்தால், நடித்து முடித்த பிறகு உடனடியாக சிரித்த முகத்துடன் அந்த காட்சிகளுக்கு எதிரில் இருக்க வேண்டுமாம்.

இதுபோல செய்வது ஒரு பரிகாரமாக திரையுலகினர் கருதி வருகின்றனர். அத்துடன் திரையுலகை சேர்ந்தவர்கள் இது போன்ற சில விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஷீலா பாடையில் படுப்பது போல் நடித்துள்ளார். இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் காட்சி முடிந்தவுடன் நடித்தவருக்கு பூசணிக்காயாலும் எலுமிச்சம்பழத்தினாலும் மற்றும் தேங்காயாலும் கற்பூரம் கொளுத்தி திருஷ்டி சுற்றி முடித்த பிறகுதான் வீட்டிற்கு அனுப்பி வைப்பராம்.

மேலும் இந்த சம்பிரதாயங்கள் அனைத்தும் நடிகை ஷீலா அம்மாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் சரிவர செய்துள்ளனர். அது மட்டுமன்றி நீண்ட தூரத்திற்கு நடிகை ஷீலாவை பாடையில் வைத்து தூக்கிச் செல்வது கடினமான காரியம் என்பதால், அவருக்கு பதிலாக டூப் ஆக ஒரு பொம்மையை தயார் செய்துள்ளனர். இவ்வாறு பாசத்தோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் நடந்து கொண்டதால் இவர்களுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.