பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிய டாப் 8 வசூல் ராஜாக்கள்.. லிஸ்டிலேயே இல்லாத உலகநாயகன்!

கோலிவுட்டில் தற்சமயம் வெளியாகும் திரைப்படங்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கும் கதாநாயகர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகி, அது தற்போது அவருடைய ரசிகர்களால் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆக்கப்படுகிறது.

சியான் விக்ரம்: தன்னுடைய 46-வது வயதிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் சியான் விக்ரம் தனக்கென இருக்கும் ரசிகர் பட்டாளத்தை மகிழ்விப்பதற்காகவே வித்தியாசமான கெட்டப்பில் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தோன்றி சமீபத்தில் வெளியான படங்களை வைத்து பாக்ஸ் ஆபீஸில் குவித்த வசூல் சாதனையின் அடிப்படையில் 8-ம் இடத்தை பிடித்திருக்கிறார்.

தனுஷ்: இவரைத் தொடர்ந்து 7-வது இடத்தில் தனுஷ் இருக்கிறார். இவர் மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து தனக்கென இருக்கும் ரசிகர் கூட்டத்தை ட மகிழ்வித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான அசுரன், கர்ணன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரிந்ததிருப்பினும், இந்த படங்களை தொடர்ந்து தனுஷின் ஒருசில படங்கள் ஓடிடி-யில் வெளியாகி எதிர்பார்த்த அளவு வசூல் சாதனை படைக்கவில்லை.

சிம்பு: இவரைத் தொடர்ந்து ஆறாவது இடத்தை சிம்பு பிடித்திருக்கிறார். என்னதான் இவர் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானாலும் அவருக்கு என்று இருக்கும் ரசிகர்களின் ஆதரவுடன் தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து, கட்டுக்கோப்பான உடல் அமைப்பின் மீண்டும் மாநாடு படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து பிளாக்பஸ்டர் வெற்றியை தக்க வைத்துக் கொண்டா.

சூர்யா: ஐந்தாவது இடம் சூர்யாவிற்கு கிடைத்திருக்கிறது. இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ரஜினி .,கமலுக்கு அடுத்த நிலையில் ரசிகர்களின் மனதில் இருந்தவர். ஆனால் இவருடைய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் மீண்டும் சூரரைப்போற்று படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக மறுபடியும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து வெளியான ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை குவித்திருக்கிறது.

சிவகார்த்திகேயன்: இதைப்போல் 4-வது இடம் சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார். இவருடைய படங்கள் அனைத்தும் குழந்தைகளையும் பெண்களையும் வெகுவாக கவர்ந்த விடுவதால், சத்தமில்லாமல் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி, இவருடைய படங்களின் மூலம் வசூல் சாதனையை குவித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி: மூன்றாவது இடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ரஜினியின் ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்ததால், அவரை மூன்றாம் இடத்திற்கு வர வைத்திருக்கிறது. இருப்பினும் இவருடைய படங்களின் கதை நன்றாக இருக்குதோ இல்லையோ இவருடைய ரசிகர்கள் அந்த படத்தை எப்படியாவது ஓட வைத்து விடுவார்கள். அதுதான் இவருடைய ரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தற்சமயம் ரஜினி நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

அஜித்: இதைத் தொடர்ந்து 2-வது இடம் தல அஜித். கிரிக்கெட் வீரர், பிரதமர் முதல் அஜித்தின் அடுத்த பட அப்டேட்டை ஆர்வத்துடன் அறிந்து கொள்ளும் ரசிகர்கள் இருப்பதினாலேயே இவருடைய ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீஸில் தெறிக்கும் விட்டுக் கொண்டிருக்கிறது.

விஜய்: பெரும்பாலும் சோஷியல் மீடியாவில் தல அஜித் மற்றும் தளபதி விஜய்க்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையை வைத்து பார்த்தால் தளபதி விஜய் தான் வசூல் ராஜாவாக இருந்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

இவருடைய ஒவ்வொரு பட அப்டேட் மற்றும் ரிலீஸ் அனைத்தும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களால் அதிகம் பார்க்கக் கூடிய மற்றும் பகிரக் கூடியவையாக உள்ளது. இவ்வாறு பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை வைத்து டாப் 8 இடங்களை பிடித்த நடிகர்களின் லிஸ்டில் உலகநாயகன் கமல் வராதது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

தற்சமயம்  வருடைய படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. ஆனால் விக்ரம் படத்தின் வேலை மும்முரமாக நடைபெறுவதால் இந்த படம் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை தட்டி தூக்கம் என உலக நாயகன் கமலஹாசன் உடைய ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.