பாக்ஸிங் மையமாக வைத்து வெளிவந்த 6 படங்கள்.. உடலை வருத்தி ஹிட்டடித்த இரண்டு ஹீரோக்கள்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் குத்துச் சண்டையை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு பாக்ஸிங் மையமாக வைத்து ஹிட்டடித்த 6 படங்களை பார்க்கலாம்.

பத்ரி: அருண்பிரசாந்த் இயக்கத்தில் 2001 இல் வெளியான திரைப்படம் பத்ரி. விஜய், பூமிகா, விவேக் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். பத்ரி படத்தில் பொறுப்பில்லாமல் சுற்றும் இளைஞனாக உள்ள விஜய் தன் தந்தை மற்றும் அண்ணனுக்காக பாக்ஸிங் போட்டியில் கலந்துகொண்டு இறுதியில் வெற்றி பெறுகிறார்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி: ராஜா இயக்கத்தில் 2004 இல் வெளியான திரைப்படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இப்படத்தில் ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் ஜெயம் ரவி, தன் தந்தை பிரகாஷ்ராஜ் பாக்ஸிங் வீரர் என்பது தெரியாமலே இவருக்கும் பாக்ஸிங் மீது ஆர்வம் வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் குத்துச்சண்டை தத்ரூபமாக இருக்கும்.

மான் கராத்தே: சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோட்வானி, சூரி, வம்சி கிருஷ்ணா, சதீஸ் ஆகியோர் நடிப்பில் 2014 இல் வெளியான திரைப்படம் மான் கராத்தே. இப்படத்தில் ராயபுரம் பீட்டர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். வேலை வெட்டி இல்லாத சிவகார்த்திகேயன், பெரிய பாக்ஸிங் வீரராக எப்படி உருமாறுகிறார் என்பதே மான் கராத்தே.

இறுதிச்சுற்று: சுதா கொங்கரா இயக்கத்தில் 2016 இல் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. இப்படத்தில் குத்துச் சண்டை பயிற்சியாளராக மாதவன் நடித்து இருந்தார். இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். பெண்களுக்கான இந்திய குத்துச்சண்டை தேர்வில் நடக்கும் திருட்டு தனங்களை வெளிப்படையாக காட்டும் படம் இறுதிச்சுற்று.

மிஸ்டர் சந்திரமௌலி: திரு இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மிஸ்டர் சந்திரமௌலி. இப்படத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கசாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் அப்பா மகன் பாசம், காதல், பாக்ஸிங் என அனைத்தையும் குறைவில்லாமல் காட்டப்பட்டிருந்தது.

சார்பட்டா பரம்பரை: பா ரஞ்சித் இயக்கத்தில் 2021 இல் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், பசுபதி, அனுபமா குமார் ஆகியோர் நடித்திருந்தனர். வடசென்னையில் உள்ள இடியப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு தரப்பு இடையே உள்ள மோதலில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சார்பட்டா பரம்பரை.