பாக்கியா, ராதிகாவை அழகில் மிஞ்சும் கோபியின் நிஜ மனைவி.. ஜோடியாக வெளியான புகைப்படம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த சீரியலுக்கு டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோபி கதாபாத்திரம்தான்.

பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சதீஷ். இவர் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடித்து அதன்பின், பல தொடர்களில் நடித்துள்ளார். பாக்யலட்சுமி தொடரின் மூலம் தான் இவர் மிகவும் பிரபலமானார். இத்தொடரில் கோபி கதாபாத்திரத்திற்கு ஒரு அழகான குடும்பம் இருந்தும், அவர் வேறு ஒரு பெண்ணை விரும்புவது போல் காட்டப்படுகிறது. இதனால் பாக்கியலட்சுமி ரசிகர்கள் இவரை திட்டி வருகிறார்கள் .

இப்படிபட்ட ஒரு ரோலில் நடித்து வரும் சதீஷ் நிஜ வாழ்கையில் செம ஜாலியான டைப் என்று அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்புகளுக்கு தெரிந்திருக்கும். சீரியலில் மனைவி பாக்கியா இருக்க ராதிகா மீது ஆசைப்படும் இவரின் நிஜ மனைவி யார் தெரியுமா. பிரபல மலையாள நடிகை கீதா விஜயன் தான் சதீஷின் உண்மையான மனைவி.

கீதா விஜயன் 150க்கு மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு காஞ்சிவரம், விடியும் வரை காத்திரு, ஆதார் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது கீதா விஜயன் மலையாள தொடர்களில் நடித்து வருகிறார்.

காட்டுவாசிகளை களத்தில் இறக்கியது சர்வைவர்.. பதறிய போட்டியாளர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே காடர்கள் அணி வேடர்கள், அணி என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். இந்த ...