பாக்கியாவோடு சேர்த்து நம்மளையும் கூமுட்டையாக்கிய இயக்குனர்.. பொம்பள சோக்கு கேக்குதா கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கல்லூரி காதலி ராதிகாவுடன் தொடர்பில் இருந்த பாக்யாவின் கணவர் கோபி, தற்போது பாக்யாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளான். எதற்காக கையெழுத்து போடுகிறோம் என்பதை கூட அறிந்திடாத பாக்யா கணவர் மீது இருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையினால் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்துப் போட்டு விட்டாள்.

அதன்பிறகு பாக்யாவிடம் கோபி தன்னுடைய கம்பெனியில் நிர்வாக ரீதியாக பிரச்சனை ஏற்பட்டதால் ஒரு சில ஆவணங்களை உன்னுடைய பெயரில் மாற்ற போகிறேன். அதற்கான கையெழுத்து தான் இதெல்லாம் என்று வாய்கூசாமல் பாக்யாவிடம் கோபி பொய் சொல்கிறான்.

இதையும் நம்பிய கூமுட்டை பாக்யா, கணவர் தன் மீது எவ்வளவு பாசமாக இருக்கிறார் என்பதை நினைத்துப் பெருமைப் படுகிறாள். இதன்பிறகு கோபி ராதிகா உடன் வக்கீலிடம் சென்று இந்த விவாகரத்து பத்திரத்தை ஒப்படைக்கிறான்.

அங்கும் வக்கீலிடம் தன்னுடைய மனைவி சம்மதத்தின் பெயரிலேயே விவாகரத்து பெறுவதாக பொய்க்கு மேல் பொய் பேசுகிறான். இன்னும் ஆறே மாதத்தில் பாக்யாவை நிரந்தரமாக விட்டுப்பிரிந்து ராதிகாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே என்ன வேணாலும் பொய் சொல்லலாம் என்ற அளவிற்கு கோபி தரம் கெட்டு போய்விட்டான்.

இவ்வளவு நாள் அடுத்தவள் கணவன் என குற்ற உணர்ச்சியுடன் பழகிக் கொண்டிருந்த ராதிகாவிற்கு, இனி அதெல்லாம் இல்லாமல் தனக்கு சொந்தமாக போகிறவர் என கோபியின் மீது முன்பை விட நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டாள். பொம்பள சோக்கு கேக்குதா கோபி என்பது போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் தற்போது பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறு பாக்கியாவை மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களையும் இயக்குனர் கூமுட்டை ஆக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.