பாக்கியலட்சுமி தொடரில் புது செழியன் இவர்தான்.. எழில விட செம கெத்தா இருக்காரே

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இத்தொடரின் கதாநாயகி பாக்கியலட்சுமிக்கு மூன்று குழந்தைகள். இதில் மூத்த மகன் செழியன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஆரியன்.

சமீபத்தில் ஆரியன் மற்றும் செம்பருத்தி சீரியல் ஷபானா இருவரும் காதலித்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வெள்ளித்திரையில் பட வாய்ப்புக்காக பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஆரியன் வெளியேற போவதாக தகவல் வெளியானது.

பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரம் குடும்பத்தின் மீது அக்கறையற்று சுயநலவாதியாக இருக்கக் கூடியவர். அவருடைய தாத்தா மருத்துவ செலவிற்கு கூட கணக்குப் பார்ப்பார். இதனால் அவருடைய மனைவி ஜெனியும், செழியனும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள்.

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து ஆரியன் வெளியேற போவதால் செழியன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜபார்வை தொடரில் நடித்த விகாஷ் சம்பத் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாப்பாத்திரம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படாத நிலையில் விகாஷ் சம்பத் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் பாக்கியலட்சுமி தொடரில் புதிய திருப்பங்கள் வர வாய்ப்புள்ளது.