பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வெளியேறும் அடுத்த முக்கிய பிரபலம்.. விஜய் டிவியின் டிஆர்பி-க்கு ஆப்பு!

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளுக்கு இஷ்டமான சீரியலாக மாறி உள்ளது. இதில் பாக்யாவின் கணவர் கோபி வீடே கதி என நினைக்கும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கல்லூரி காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்வது போல் சீரியலின் கதைக்களம் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருப்பதால் அனுதினமும் பாக்கியலட்சுமி சீரியலை சின்னத்திரை ரசிகர்கள் பார்க்க தவறுவதில்லை.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக சமீபத்திய தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. அதாவது பாக்யாவின் மூத்த மகனாக சுயநலவாதியாக தன்னுடைய வாழ்க்கையை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஆரியன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப் போகிறார்.

இவருக்கும் சமீபத்தில் ஜீ தமிழின் சூப்பர் ஹிட் சீரியல் ஆன செம்பருத்தி சீரியல் கதாநாயகி ஷபானா இருவருக்கும் காதல் திருமணம் இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்டது. அதன் பிறகு செழியன் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்

ஆனால் செழியனுக்கு சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதால், பாக்கியலட்சுமி சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் தன்னுடைய நேரம் செலவிடுவதால் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற கூடுதல் கவனம் செலுத்தப் போகிறாராம்.

ஆகையால் இந்த சீரியலில் இருந்து விலகி வேறு சீரியலில் கதாநாயகனாகவும் அல்லது படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற ஆரியன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கிளம்பி விட்டார். இவர் இந்த சீரியலின் அழுத்தமான கதாபாத்திரம் செழியன் என்பதால் வேறு ஒரு நடிகரை செழியனாக ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இதனால் இந்த சீரியல் டிஆர்பி-யில் கடுமையாக அடிவாங்கும். ஆகையால் இந்த வாரத்தின் டிஆர்பி டாப் லிஸ்டில் இருக்கும் பாக்கியலட்சுமி இனி வரும் நாட்களில் பின்னடைவை சந்திக்க போகுமோ என சீரியல் குழுவினர்கள் குழப்பமடைந்துள்ளனர்.