பாகுபலி நாயகனின் ராதே ஷ்யாம் ரசிகர்களை கவர்ந்ததா?.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் இன்று உலக அளவில் வெளியாகி இருக்கிறது.

இதில் காலத்தை கணிப்பவராக பிரபாஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க காதல் கலந்து ரொமான்டிக்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. மேலும் இப்படத்தை பற்றிய கருத்துக்களை ரசிகர்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படத்தை பார்த்த பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் ரசிக்கத்தக்க வகையாக இருக்கிறது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்றும், மிகவும் பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ள பல காட்சிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

அதோடு பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவருக்கும் இடையே இருக்கும் காதல் காட்சிகளும், கெமிஸ்ட்ரியும் அற்புதமாக இருப்பதாக பதிவிட்டுள்ளனர். ஆக மொத்தத்தில் இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிகவும் நன்றாக இருப்பதாக பல பாசிட்டிவ் கருத்துகள் ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.