பாகிஸ்தானிlலே கொடிகட்டிப் பறக்கும் அஜித்.. வெளிப்படையாய் சொன்ன பத்திரிக்கையாளர்

சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அஜித்குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்குவதற்கு முன்பு அடுத்த படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அஜித்தின் 62வது படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 0இசையில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. தற்காலிகமாக Ak 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் குமார் இருவரும் இதை மறுக்கவும், உறுதிப்படுத்தவும் இல்லை. இப்படத்தின் தயாரிப்பாளர் மூலம் Ak 62 படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித்தை பற்றி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார். அதில் அஜித்துடன் விக்னேஷ் இணைய உள்ளதால் இது இவரது சினிமா வளர்ச்சியை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா இருவரும் ஐந்தாவது முறையாக இணைய உள்ளதால் இதனை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என கூறியுள்ளார். ஏகன், பில்லா, ஆரம்பம், விசுவாசம் ஆகிய படங்களில் அஜித், நயன்தாரா இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இந்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் தனது சமூக வலைதளங்களில் போட்ட இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இதனால் தங்கள் தலை பாகிஸ்தானிலேயே கொடிகட்டிப் பறப்பதாக ரசிகர்களை குஷி மூடில் இருக்கின்றனர்.