பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில நாட்களாக மீனாவை சுற்றி கதை நகர்ந்து வருகிறது. தனத்திற்கு குழந்தை பிறந்து விட்டதால் அனைவரும் தன் குழந்தை கயலை மறந்துவிட்டதாக மீனா வருத்தப்படுகிறார்.

மேலும் தனம் தன் குழந்தையை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டதாக கோபப்படுகிறார். தன் குழந்தை கயலுக்கு பரம்பரை தொட்டிலை பயன்படுத்த கூறிய குடும்பத்தினர், தனத்தின் குழந்தைக்கு மட்டும் புதிய தொட்டிலை பயன்படுத்துவதைக் கண்டு கொதிப்பின் உச்சத்தில் இருக்கிறார் மீனா.

இதைக் கண்ட கதிர் மீனாவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். அப்பொழுது அங்கு வரும் கண்ணன் மீனாவிடம் தனத்தின் குழந்தையை பார்க்க முடியுமா என்று கேட்கிறார். ஏற்கனவே கோபத்தில் இருக்கும் மீனா இதுபோன்ற சம்பவங்களால் தன்னையும், தன் குழந்தையும் அனைவரும் மறந்து விட்டதாக நினைக்கிறார். இந்த கதை களத்தை கொண்டு இந்த வார காட்சிகள் நகரும் என்று தெரிகிறது.

சென்ற வாரம் ஜீவா, முல்லையிடம் கதிரை தப்பாக நினைத்து அதற்காக மன்னிப்பு கேட்டது மீனாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் முல்லையின் மேல் கோபமாக இருக்கும் மீனா இந்த வாரம் அனைவருக்கும் பதிலடி கொடுப்பார் என்று தெரிகிறது.

மீனா தற்போது தான் குடும்பத்தினர் அனைவரோடும் நன்றாக பழக ஆரம்பித்தார்.இப்போதைய கதையின் போக்கினால் பழைய மீனா மீண்டும் வெளியே வர ஆரம்பித்துள்ளார்.