பழையபடி முருங்க மரம் ஏறும் வேதாளம்.. சிம்பு மீது கடும் கோபத்தில் ஐசரி கணேஷ்

சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, கொரோன குமார் என வரிசையாக மூன்று படங்கள் வைத்திருக்கிறார். வெந்து தணிந்தது காடு படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துள்ளது. அதன்பின் கொரோன குமார் படம் ஆரம்பிக்கும் தருவாயில் புது பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது.

சிம்புவின் மாநாடு படம் நூறு கோடி கலெக்சன் என்று சொல்கிறார்கள். இதனால் சிம்பு மார்க்கெட் ஜெட் வேகத்தில் சென்றது. அதனால் அவர் சம்பளத்தை கூட10ல் இருந்து 15 கோடியாக ஏற்றி விட்டார்.

இந்நிலையில் சிம்பு மாநாடு படத்திற்கு முன் கமிட்டான படங்கள் மூன்று. அந்த படங்களை ஐசரி கணேஷ் தயாரிப்பு நிறுவனத்திற்கு நடித்து தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. வெந்து தணிந்தது காடு, கொரோன குமார் என கிட்டத்தட்ட மூன்று படங்கள் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சிம்புவின் மார்க்கெட் உயரவே இந்த மூன்று படங்களுக்கும் அவர் சம்பளத்தையும் அதிகமாக கேட்கிறார். இந்த 3 படங்களும் அவர் மார்க்கெட் கொஞ்சம் டல்லாக இருக்கும் போதே கமிட் செய்யப்பட்டது. ஆகையால் மொத்தமாக மூன்று படங்களுக்கும் மொத்தம் 30 கோடி சம்பளம் தருவதாக பேசியிருக்கிறார்கள்.

இந்நிலையில் எகிறிய புது மார்க்கெட்டால் வெந்து தணிந்தது காடு படத்திற்கு மட்டும் நான் பழைய சம்பளத்தை வாங்கிக் கொள்கிறேன். மீதமுள்ள இரண்டு படங்களுக்கும் சம்பளத்தை அதிகப்படுத்துங்கள் என சிம்பு இப்பொழுது கேட்கிறாராம்.

ஐசரி கணேஷ்சிடம் ஒரு படத்திற்கு சிம்பு தற்போது 25 கோடி கேட்கிறார். இதனால் என்ன செய்ய செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். சிம்பு இப்படி கேட்பதால் அவர் மீது கடும் கோபத்தில் ஐசரி கணேஷ் இருப்பதாக தெரிகிறது. எது எப்படியோ வேதாளம் பழையபடி முருங்கைமரம் நேராமல் இருந்தால் சரி என்று ரசிகர்கள் பயப்படுகின்றனர்.