பழசை மறக்காத வடிவேலு.. திரும்ப வந்ததும் ஒவ்வொருத்தராய் தட்டித் தூக்கும் வெறிச்செயல்

தன்னுடைய நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வடிவேலு பல பிரச்சனைகளின் காரணமாக சினிமாவை விட்டு சில காலங்கள் ஒதுங்கி இருந்தார். அதனால் சினிமாவில் நகைச்சுவைக்கு பஞ்சம் என்ற நிலை ஏற்பட்டது.

ஏனென்றால் வடிவேலின் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். அதனால் வடிவேலு இல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.ml தற்போது அந்த இடத்தை நிரப்பும் வகையில் வடிவேலு மீண்டும் களமிறங்கி உள்ளார்.

இவருக்கு போடப்பட்டிருந்த தடைக்காலம் தற்போது முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் பல படங்களில் இவர் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் இப்போது நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

மேலும் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சந்திரமுகி 2, தலைநகரம் 2 போன்ற பல படங்களில் வடிவேலு பிசியாகி இருக்கிறார். இப்படியாக அவரின் கைவசம் இருக்கும் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்நிலையில் அவர் திரும்பவும் நடிக்க வந்தவுடன் தன்னுடைய பழைய கூட்டணி ஆட்களை எல்லாம் வெறித்தனமாய் தட்டி தூக்கி வருகிறாராம்.

எப்போதுமே வடிவேலுவின் காமெடி காட்சிகளில் போண்டா மணி உள்ளிட்ட வளர்ந்து வரும் காமெடி நடிகர்கள் நடிப்பது வழக்கம். ஆனால் வடிவேலு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த காலத்தில் அவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனால் தான் வடிவேலு தற்போது பழசை மறக்காமல் தன்னுடன் இணைந்து காமெடி செய்தவர்களை எல்லாம் மீண்டும் அழைத்து வாய்ப்பு கொடுத்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் எல்லோருக்கும் தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுப்பதாகவும் அவர் வாக்களித்துள்ளாராம். இதனால் மீண்டும் வடிவேலுவுடன் அவர்கள் அனைவரும் கூட்டணி போட இருக்கின்றனர்.