பல வருடங்களா காத்திருக்கும் அஜித்,விஜய்.. கொஞ்சம் கூட ஈகோ இல்லாத மனுசங்க

தமிழ் சினிமாவில் வசூல் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவரும் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்திலிருந்தே நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரின் குடும்பங்களும் நெருங்கிய உறவினர்கள் போல் தான் இருக்கின்றனர்.

என்ன தான் இவர்களின் ரசிகர்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தாலும் சம்பந்தப்பட்ட இந்த நடிகர்கள் இருவரும் இன்றுவரை அதே நட்புடன் தான் இருக்கின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இவர்கள் இருவரும் சந்தித்து தங்கள் நட்பை வளர்த்துக் கொள்வது வழக்கம்.

அப்படி ஒரு வாய்ப்பு தான் அவர்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. இப்போது விஜய், அஜித் இருவர் படங்களுமே ஹைதராபாத்தில் தான் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அஜித் ஏகே 61 திரைப்படத்திலும், விஜய் தளபதி 66 திரைப்படத்திலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் இதே போல் இவர்கள் இருவரின் பட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்தது. அதாவது அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படம் மற்றும் விஜய்யின் வேலாயுதம் திரைப்படம் இரண்டும் ஒரே சமயத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

அப்பொழுது இருவரும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கிடைத்த சிறிது நேரத்தில் இருவரும் சந்தித்து தங்களது நட்பை வளர்த்துக் கொண்டனர். அவர்கள் சந்தித்து பேசியது மட்டும் அல்லாமல் ஒன்றாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டு பல விஷயங்களைப் பற்றியும் விவாதித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு அவர்கள் இருவரும் படங்களில் மிகவும் பிஸியாக இருந்த காரணத்தால் இது போன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. தற்போது பல வருடங்களுக்கு பிறகு அப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் இப்போது மீண்டும் சந்தித்து தங்கள் படங்கள் குறித்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.