பல வருடங்களாக கிடைக்காத அங்கீகாரம்.. புது அவதராம் எடுக்கும் கமலின் மகள்

பல வருடங்களாக தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பினால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது அரசியலிலும் களம் புகுந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கிறார்.

ஆனால் இவரின் இளைய மகள் அக்ஷரா ஹாசனுக்கு சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் அஜித் நடித்த விவேகம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அந்தப் படத்திற்கு பிறகு இவர் தன் தந்தையின் தயாரிப்பில் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் நடித்தார். விக்ரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இத்திரைப்படம் பரவலான விமர்சனங்களை பெற்றது. அதன்பிறகு இவர் எந்த பட வாய்ப்பும் கிடைக்க படாமல் இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பில் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு” என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் அக்ஷரா கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

வரும் 25ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்சராஹாசன் உடன் இணைந்து பிரபல பாடகி உஷா உதூப், மால்குடி சுபா, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினை சுற்றி தான் நடக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் சினிமாவில் நீண்ட காலம் ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்த அக்ஷராஹாசன் இந்த திரைப்படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.