பல மொழிகளில் வாய்ப்பு வந்தும் நடிக்க மறுத்த விஜய்.. ஹிந்தியில் நடித்த ஒரே படம்.!

என்னதான் தனது தந்தை மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், அதன் பின்னர் தனது சொந்த முயற்சியாலே விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வளர்ந்துள்ளார். ஆரம்ப காலத்தில் இவரும் பலரது கேலி கிண்டல்களுக்கு ஆளாகி பல அவமானங்களை தாண்டி தான் இந்த நிலைக்கு முன்னேறியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் பிராண்ட் நேமாகவே விஜய் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

விஜய் என்ற ஒற்றை பெயருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படம் வெற்றியோ தோல்வியோ எப்படி இருந்தாலும் விஜய் ரசிகர்கள் ஒருபோதும் அவரை விட்டு கொடுத்ததில்லை. விஜய்யும் அப்படிதான் இருந்தார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே போதும் ரசிகர்களை பார்க்க கிளம்பி விடுவார்.

ரசிகர்களிடம் மிகவும் அன்பாகவும், நட்பாகவும் பழகிய நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான். இதுமட்டுமின்றி விஜய் தனது இத்தனை ஆண்டு கால திரை வாழ்க்கையில் தமிழ் படத்தை தவிர வேறு எந்த மொழி படத்திலும் நடிக்கவில்லை. நடிக்கவும் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

இருப்பினும் விஜய்க்கு தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் தனது கொள்கை காரணமாக அத்தனை வாய்ப்புகளையும் அவர் நிராகரித்தார். அந்த சமயத்தில் தான் 2012ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான ரவுடி ரத்தோர் என்ற படத்தில் அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு மட்டும் விஜய் ஆடி இருப்பார்.

அதுவும் பிரபுதேவா மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதற்காகவே விஜய் ஆடினாராம். விஜய்யும் பிரபுதேவாவும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பிரபுதேவா இயக்கத்தில் போக்கிரி, வில்லு போன்ற படங்களில் விஜய் நடித்துள்ளார். இதுவரை ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிய விஜய் தற்போது முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.