பல சாதனைகளை முறியடிக்கும் பீஸ்ட் ட்ரைலர்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த தளபதி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. அண்மையில் இப்படத்தில் விஜய்யின் பெயர் வீரராகவன் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த ட்ரெய்லர் சுமார் 4 மணி நேரத்திலேயே 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

அதில் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தன்று வெளியானது. இப்பாடல் தற்போது யூடியூபில் 252 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை சாதனைகள் மற்றும் பிகில், மாஸ்டர் போன்ற சாதனைகளையும் முறியடித்து உள்ளது இந்த பீஸ் ட்ரைலர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரில் பிரம்மாண்ட ஷாப்பிங் மாலுக்குள் பலரை தீவிரவாதி கும்பல் கடத்தி வைத்துள்ளார்கள்.

அவர்களை மீட்கும் முயற்சியிலும், தீவிரவாதிகளை அழிக்கவும் விஜய் செயல்படுகிறார். மேலும் இப்படத்தில் செல்வராகவன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. பீஸ்ட் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

பீஸ்ட் படம் தற்போது வரை பல சாதனைகளை முறியடித்து வருகிறது. இப்படம் வெளியாகி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வசூலை முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் பீஸ்ட் படத்திற்கு மறுநாள் ஏப்ரல் 14ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கே ஜி எஃப் 2 வெளியாகயுள்ளது.

இதனால் பீஸ்ட் படம் முதல் நாள் வசூலை வாரி குவித்தாலும் அடுத்தடுத்த நாட்களில் சரி வர வாய்ப்புள்ளது. ஆனால் பீஸ்ட் படத்தின் டிரைலரே சாதனைபடைத்த நிலையில் கேஜிஎஃப் படத்தை பீஸ்ட் படம் ஓரங்கட்டும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.