பலநாள் ரகசியத்தை சொல்லி விவாகரத்து பெற துணிந்த பாரதி.. எதையும் சந்திக்க தயாரான கண்ணம்மா

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா தற்போது விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கண்ணம்மாவிடமிருந்து பாரதி விவாகரத்துப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

கண்ணம்மாவும் பாரதிக்கு விவாகரத்து கொடுக்கக் கூடாது என்பதில் ஆணித்தரமாக இருக்கிறார். இவ்வாறு இருக்க பாரதி நீதிபதியிடம் வலுவான காரணத்தை சொல்லி விவாகரத்து பெற போவதாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது .

ஒருவேளை பாரதி தனக்கு குழந்தை பெறுவதற்கான தன்மை இல்லை என்பதை நீதிபதியிடம் போட்டு உடைத்து விடுவார் என்று ரசிகர்கள் கணிக்கின்றனர். அவ்வாறு பாரதி சொன்னார் நிச்சயம் கண்ணம்மாவிடம் வளர்ந்து கொண்டிருக்கும் பாரதியின் மகள் லட்சுமிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்படும்.

அதன்பிறகு முழு உண்மையும் தெரியவந்து பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து விடுவார்கள். ஆனால் இவ்வாறு நடக்க பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனர் விடுவாரா?

ஏனென்றால் ஜவ்வு மாதிரி இழுப்பதுதானே சின்னத்திரையின் ஸ்பெஷாலிட்டி. அப்படி இருக்க அவ்வளவு சீக்கிரம் பாரதிக்கு உண்மை தெரிந்து விடுமா? ஒரு வேளை பாரதி எட்டு வருடங்களாக கண்ணம்மா உடன் சேர்ந்து வாழவில்லை.

இதன் அடிப்படையிலேயே எங்களை பிரித்து வையுங்கள் என்ற காரணத்தை நீதிபதியிடம் சொல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் விவாகரத்துப் பெறுவதற்காக பாரதி கூறும் ஸ்ட்ராங்கான காரணம் என்ன என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்த சுந்தர் சி.. அதுவும் சிம்பு பட இயக்குனருடன்

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக பல வெற்றி படங்களை வழங்கியவர் தான் இயக்குனர் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த சுந்தர் சி திடீரென தலைநகரம் படம் மூலமாக ஹீரோ ...