பரணி போல் சுவர் ஏறி குதிக்க தயாராகும் பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்.. தேம்பித் தேம்பி அழுகை

பிக் பாஸ் சீசன்5 வீட்டில் சக போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் நடவடிக்கையால் காயப்பட்டார் அக்சரா. இதனால் பல மணி நேரம் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். இவரின் செய்கையை உற்று கவனித்த பிக்பாஸ் உடனடியாக அக்சராவை கன்ஃபெசன் ரூமுக்கு வரும்படி உத்தரவிட்டார்.

கன்ஃபெஷன் ரூமுக்கு வந்ததும் கதறி அழுத அக்சரா தன் மனதில் இருந்த குமுறல்களை கொட்டினார். அவர் எது செய்தாலும் தவறாகவே இருப்பதாகவும், தன்னை பிக் பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றி விடுமாறும் பிக்பாஸிடம் கதறினார். அத்துடன், பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோரின் திட்டத்தைப் பற்றி சுட்டிக்காட்டினார்.

அப்போது கூறிய அக்சரா இவர்கள் மூவரும் டாப் 5 கன்டஸ்டன்டுகளாக வருவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்டனர் என்று கூறினார். அத்துடன், நான் மதுவை காப்பாற்ற நினைத்ததே தவறு என்றும் மதுவால் தான் எனக்கு இப்படி ஒரு நிலைமை என்றும் கூறி அழுதார் அக்சரா. அப்போது அக்சராவிடம் பிக்பாஸ், நீங்கள் சிறப்பாக விளையாடி வருகிறீர்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்ல நினைக்காதீர்கள் என்றும் வலியுறுத்தினார். அதன் பின்பும் தொடர்ந்து அழுத அக்சரா அடுத்ததாக அண்ணாச்சியை பற்றி கூறினார். அதாவது பிரியங்காவின் குழுவினர் பயங்கரமான திட்டத்தை தீட்டுவதாகவும் மற்றும் பயங்கர சதி வேலைகளை செய்வதாகவும் அண்ணாச்சி கூறியதாக தெரிவித்தார் அக்சரா.

அதைத்தாண்டி, அபிஷேக்கை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அக்சரா. ஆரம்பத்திலிருந்தே அபிஷேக் அனைவரையும் டாமினேட் செய்யும் விதமாக நடந்து கொள்வதாகவும், அபிஷேக் போன்ற போட்டியாளர்களுடன் போராடி என்னால் வெற்றிபெற முடியாது என்பது போலவும் அபிஷேக்கை பற்றி தெரிவித்துள்ளார் அக்சரா. இவர் கூறிய காரணங்கள் அனைத்தையும் கேட்டு, இவர் நடிக்கிறாரா? என்றும் பிக் பாஸ் குழு குழம்பிப் போயினர்.

இவை அனைத்தையும் கூறியவாறே பயங்கரமாக அழுது தன்னை உடனடியாக தன் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி பிக்பாஸ் இடம் கோரிக்கையை முன்வைத்தார் அக்சரா. ஒரு நாள் அவகாசம் எடுத்து யோசித்து பிறகு மீண்டும் எனக்கு பதில் சொல்லுங்கள் என்று பிக்பாஸ் அக்ஷராவிடம் கூறினார்.

இவரின் இந்த வினோத நடவடிக்கை இதற்கு முந்தைய சீசனில் பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்ட பரணியை நினைவூட்டுகிறது. போட்டியாளர் பரணி அழுது, புலம்பி பின்னர் பிக் பாஸ் வீட்டிலிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரைப்போலவே இவரும் முயற்சி செய்வாரோ? என்ற சந்தேகம் பிக் பாஸ் குழுவினருக்கு எழுந்துள்ளது.